முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

அனைவரும் காத்திருந்த நிலையில் தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி அதில் ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகம் ஆகி வருகின்றனர். ஏற்கனவே தர்ஷா குப்தா, ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேன் ரவீந்தர், தீபக் நடிகை சச்சனா மற்றும் சத்யா ஆகியோர் அறிமுகமாகி இருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்னும் யார் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சு இருந்தது.

முதல் நாளே சண்டை

அதற்கு ஏற்றார் போல சிலர் ரசிகர்களின் அனுமானத்திற்கு ஏற்றபடி இந்த நிகழ்ச்சிக்குள் வந்திருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி கமல்ஹாசனிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு நிகழ்ச்சியை தொகுத்து வருவதை பார்க்க முடிகிறது.

ஆரம்பத்தில் அனைவரிடமும் மிகவும் நட்புடன் பேசி வருகிறார் விஜய் சேதுபதி. அடுத்த அடுத்த வாரங்களில் இந்த நட்பு அப்படியே நீடிக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் பொதுவாக தொகுத்து வழங்குபவர்களுக்கும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் இடையே சண்டை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிக் பாஸில் அதிகமாகவே உண்டு.

வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்

இந்த நிலையில் போட்டி துவங்கிய முதல் நாளே இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படும் ஒரு விஷயத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்து வைத்திருக்கின்றனர். தற்சமயம் பிக் பாஸ் வீட்டில் பாதியாக பிரித்து நடுவில் ஒரு கோடு போட்டு போடப்பட்டுள்ளது.

அதில் ஒரு பாதியில் பெண்களும் இன்னொரு பாதையில் ஆண்களும் பங்கேற்க வேண்டும் என்று அவர்களுக்கு விதிமுறை விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன பிரச்சனை என்றால் ஒரு பக்கம் படுக்கையறை போன்ற வசதியான விஷயங்கள் இருக்கின்றன.

ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேன் செய்த சம்பவம்

ஆனால் இன்னொரு பக்கம் அந்த விஷயங்கள் இல்லை அதற்கு பதிலாக சமையல் கட்டு போன்ற விஷயங்கள் இருக்கின்றன. எனவே சமையல் கட்டுப்பக்கம் போகிறவர்கள் சமையல் போன்ற வேலைகளை அவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

மேலும் தூங்குவதற்கு அவர்கள் எந்த பக்கம் வருவது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் போட்டியாளர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர் இதற்கு நடுவே எந்த  பக்கத்தை தேர்ந்தெடுப்பது என்பதில் ஆர்.ஜே ஆனந்திக்கும் ஃபேட்மேன் ரவீந்தருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இந்த நிலையில் தீர்க்கமான ஒரு முடிவை கூற முடியாததால் பிக் பாஸ் இவர்கள் ஆறு பேரையுமே வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறிவிட்டார். அடுத்து இது இவர்களுக்குள்ளே பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version