பிக்பாஸ் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நிக்கிறேன்.. வேண்டாம் அவ்வளவுதான்.. கடுப்பான ஜெஃப்ரி.. தன்மானத்துல கை வைச்சா இதான் நிலைமை?.

போன வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் மெதுவாக சென்று கொண்டிருந்தாலும் கூட இந்த வாரம் சூடு பிடித்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

போனவாரம் விஜய் சேதுபதி போட்டியாளர்களுக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார். போட்டி துவங்கியது முதலே மிகவும் அமைதியாக போய்க்கொண்டிருக்கிறது என்பதை அவரே போட்டியாளர்களிடம் தெரிவித்தார்.

வார்த்தைக்கு கட்டுப்பட்டு நிக்கிறேன்

இந்த நிலையில் இந்த வாரம் போட்டிகளில் நிறைய சண்டைகள் இருப்பதை பார்க்க முடிகிறது. முக்கியமாக போட்டியாளர்கள் ஸ்கோர் செய்வதற்கு சண்டை போடுவதுதான் முக்கியமான விஷயம் என்பதை அறிந்திருக்கின்றனர்.

 

மேலும் மற்ற போட்டியாளர்களையும் இப்பொழுதுதான் அவர்கள் போட்டியாளர்களாக பார்க்க துவங்கியிருக்கின்றனர். இதற்கு முன்பு வரை அவர்களை நண்பர்களாக பார்த்து வந்தனர். இதனால்தான் போட்டியில் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்து வந்தது.

வேண்டாம் அவ்வளவுதான்

இந்த நிலையில் இன்று பிக் பாஸில் ஏதோ ஒரு டாஸ்க் கொடுத்து இருக்கின்றனர் போட்டியாளர்கள். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே ஆண் பெண் இரு போட்டியாளர்களிடமும் சுமுகமாக தான் விளையாடி வந்தார் ஜெஃப்ரி.

யாரிடமும் சண்டை போட்டு கூட அவரை பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு அமைதியாக இருந்தவரையே இன்று கோபப்படுத்தி இருக்கின்றனர். ஏதோ ஒரு விஷயத்திற்காக ஜெஃப்ரியை அழைத்து இருக்கின்றனர்.

கடுப்பான ஜெஃப்ரி

அப்பொழுது அங்கு இருந்த அனைத்து போட்டியாளர்களும் சிரித்து இருக்கின்றனர். இதனால் மிகுந்த கோபம் அடைந்திருக்கிறார் மேலும் அவர் கூறும் பொழுது பிக் பாஸ் சொன்ன ஒரு வார்த்தைக்காகதான் கட்டுப்பட்டு இங்கே நின்னுகிட்டு இருக்கேன். தயவு செஞ்சு சிரிக்காதீங்க என்று கோபமாக பேசியிருந்தார் ஜெஃப்ரி.

அவருடைய தன்மானத்தை சீண்டும் வகையில் அவரை கேலி கிண்டல் செய்து இருக்கின்றனர் என்று இதன் மூலமாக தெரிகிறது. இதனை அடுத்து மற்ற போட்டியாளர்கள் வந்து ஜெஃப்ரியை சமாதானம் செய்திருக்கின்றனர் தொடர்ந்து பிக்பாஸ் களம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version