பிக்பாஸ் சீசன் 8: ஆண்களுக்கு எதிரா பெருசா ப்ளான் போட்ட பெண்கள் அணி.. இதை மறந்துட்டீங்களேடீ? போட்டுடைத்த ஜாக்குலின்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய முதல் நாளான இன்று நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் முதல் நாளிலேயே பெரிய டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல போட்டியாளர்களுக்கு ஒரு பெரிய ஆபத்தும் இருக்கிறது. பிக் பாஸில் முதல் நாளே ஒருவர் எலிமினேட் ஆகி இருக்கிறார் என்கிற செய்தி பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆண்களுக்கு எதிரா பெருசா ப்ளான்

அதே சமயம் முதல் நாளே அவர்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இரு அணிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றனர் ஆண்கள் அணி என்ற ஒரு பிரிவும் பெண்கள் அணி என்று ஒரு பிரிவும் இருக்கின்றனர்.

106 நாட்களும் பிக் பாஸில் ஆண்களும் பெண்களும் இப்படி தனித்தனியாக தான் விளையாடப் போகிறார்கள். பிக் பாஸ் வீட்டை இரண்டாக பிரித்து ஒரு பக்கத்தை பெண்களுக்கும் ஒரு பக்கத்தை ஆண்களுக்கும் வழங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் அவர்களுக்கு என்று தனிப்பட்ட விதிமுறைகளை போட்டுக் கொள்ள முடியும். அந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டனைகளும் வழங்க முடியும் என்கிற ஒரு விஷயத்தை பிக் பாஸ் அறிவித்திருக்கிறார்.

இதை மறந்துட்டீங்களேடீ

இதனால் ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவர்களும் அவர்கள் வீட்டிற்கு என்று தனிப்பட்ட விதிமுறைகளையும் அதை மீறினால் கொடுக்கும் தண்டனைகளையும் வரிசைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆண்கள் பக்கத்தில் இருந்து பலவிதமான விதிமுறைகள் குறித்த டிஸ்கஷன் நடந்து வந்தன.

அதேபோல பெண்கள் மத்தியிலும் நடந்து வந்தது. அப்பொழுது பெண்கள் ஒரு விஷயத்தை முக்கிய விதிமுறையாக வைத்தனர் அதாவது பெண்கள் இருக்கும் பக்கத்தில் தான் கன்ஃபெஷன் அறை இருக்கிறது. அந்த அறைக்கு பிக் பாஸ் அழைத்தால் பெண்கள் வீட்டிற்குள் புகுந்து தான் ஆண்கள் வர வேண்டிய நிலை இருக்கும்.

போட்டுடைத்த ஜாக்குலின்

அப்படி பெண்கள் வீட்டிற்குள் புகுந்து ஆண்கள் செல்ல வேண்டும் என்றால் முதலில் அவர்கள் ஏற்கனவே பெண்களிடம் போட்ட விதிமுறையை நீக்க வேண்டும் அப்படி அவர்கள் நீக்காத பட்சத்தில் அவர்களுக்கு அனுமதி கிடையாது என்கிற ஒரு விதிமுறையை வைத்தனர்.

அதாவது இந்த இருவருக்கும் இடையே பிக் பாஸில் ஒரு பாதி பிரிக்கப்படும் பொழுது அதில் வசதியான பகுதியை பெண்கள் எடுத்துக் கொண்டனர். அதற்கு ஈடாக ஏதாவது ஒரு வாரத்தில் ஆண்களை நாமினேட் செய்ய கூடாது என்பது விதிமுறையாக போடப்பட்டது.

அந்த விதிமுறையை நீக்கதான் பெண்கள் இப்படி ஒரு திட்டத்தை போட்டனர். இதனை அறிந்த ஜாக்லின் கூறும் பொழுது பிக் பாஸ் ஒருவரை அழைக்கிறார் என்றால் நாம் விதிமுறை போட்டு எல்லாம் தடுக்க முடியாது எனவே நீங்கள் அதை ஒரு விதிமுறையாக சேர்ப்பது சரி கிடையாது என்று கூறினார். அவர் கூறியது போலவே பிக் பாஸும் அந்த விதிமுறை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version