நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆன பெண்கள் அணி..! ஆண்கள் அணிக்கு சிறப்பான சம்பவம் இருக்கு..!

பிக் பாஸ் தொடங்கியது முதலே அதில் அதிகமான டாஸ்க்குளில் தொடர்ந்து ஜெயித்து வருபவர்களாக பெண்கள் அணியினர் இருந்து வருகின்றனர். பொதுவாகவே ஆரம்பத்தில் இருந்தே பெண்கள் அணியினருக்கு மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

அதற்கு தகுந்தார் போல ஒவ்வொரு போட்டிகளிலும் மிகவும் ஈடுபாட்டோடு பெண்கள் அணியினர் கலந்து கொண்டு வருகின்றனர். பிக் பாஸை பொருத்தவரை அதில் கொடுக்கும் டாஸ்க்குகள்தான் போட்டியாளர்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும்.

எஸ்கேப் ஆன பெண்கள் அணி

அதில் அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளும், சச்சரவுகளும்தான் போட்டியை மிகுந்த சுவாரசியமாக மாற்றும். மிகவும் ஜாலியாக மட்டும் பிக் பாஸ் சென்று கொண்டிருப்பதை பொதுமக்களே விரும்புவது கிடையாது. இந்த நிலையில் இந்த வாரம் ஃப்ரீ எலிமினேஷன் டாஸ்க் என்கிற ஒரு டாஸ்க் வைக்கப்பட்டது.

அதாவது அந்த டாஸ்க்கில் ஜெயிக்கும் அணியினர் எலிமினேஷனுக்கு செல்ல மாட்டார்கள். மற்ற அணியினரில் இருப்பவர்கள் மட்டும் தான் எலிமினேஷனுக்கு செல்வார்கள் என்கிற விதிமுறையின் அடிப்படையில் ஒரு டாஸ்க் வைக்கப்பட்டது.

சிறப்பான சம்பவம் இருக்கு

அதன்படி குழாய்களுக்குள் சரியாக பந்துகளை போடும் அணியினருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது. இந்த போட்டியிலும் பெண்கள் அணியினர்தான் ஜெயித்து இருக்கின்றனர். இந்த நிலையில் அடுத்த வாரம் பிக் பாஸில் பெண்கள் அணியில் இருந்து யாருமே நாமினேஷன் ஆக மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இது பெண்களுக்கு மிகப்பெரிய அட்வான்டேஜ் ஆகும் ஏற்கவே ஆண்கள் அணியில் இரண்டு பேர் எலிமினேஷன் ஆகி அவர்கள் குறைவான நபர்களைக் கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு நபர் எலிமினேஷன் ஆவது பெண்களுக்கு சாதகமான விஷயமாக அமைந்து விடும் என்று கூறப்படுகிறது.

ஆனால் எப்படி இருந்தாலும் ஆண்கள் அணியினரும் ஒரு பக்கம் நல்லபடியாக தான் விளையாடி வருகின்றனர் சொல்ல போனால் ஒன்றாக இணைந்து போட்டி போடுவதில் ஆண்கள் அணியினர் பெண்கள் அணியினரை விடவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எனவே ஆண்கள் அணியினரில் ஆட்கள் குறைந்தாலும் கூட அவர்களின் விளையாட்டு சிறப்பாக தான் இருக்கும் என்று கூறுகின்றனர் ரசிகர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam