இந்த வாரம் நான் பாய்ஸ் டீமுக்கு போறேன்.. செல்லத்த அங்க அனுப்பாதீங்கடா.. கவலையில் ரசிகர்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கியது முதலே அதில் ஒரு சில பிரபலங்கள் மட்டும் அதிக வரவேற்பை பெற்று வருகின்றனர். அப்படியாக வரவேற்பு பெற்று வருபவர்களில் சௌந்தர்யா நஞ்சுண்டன் முக்கியமானவர் ஆவார்.

சௌந்தர்யா நஞ்சுண்டன் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் தொடர்ந்து நடிகை ஆவதற்காக முயற்சி செய்து வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மாடலிங் துறையில் வாய்ப்புகள் கிடைத்தது.

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வந்து கொண்டிருந்தார் சௌந்தர்யா. அதனை தொடர்ந்து அவருக்கு வேற மாறி ஆபீஸ் என்கிற சீரிஸில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலமாக அதிக பிரபலமடைந்தார் சௌந்தர்யா.

நான் பாய்ஸ் டீமுக்கு போறேன்

அந்த பிரபலத்தை பயன்படுத்திதான் தற்சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை முதல் வாரத்தில் இருந்து சௌந்தர்யாவிற்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். வேற மாறி ஆபீசில் நடித்த பொழுது அவருக்கு வந்த ரசிகர் கூட்டத்தை விடவும் இப்பொழுது அது அதிகரித்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் நாமினேஷனுக்கு சௌந்தர்யா வந்தாலும் கூட சௌந்தர்யாவிற்குதான் உள்ள போட்டியாளர்களிலேயே அதிகமான ஓட்டுக்கள் விழுந்து வருகின்றன. போகிற போக்கில் கண்டிப்பாக சௌந்தர்யா இந்த முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கூட அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

செல்லத்த அங்க அனுப்பாதீங்கடா

அதே போல தனது பெயர் கெடாத வண்ணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி வருகிறார் சௌந்தர்யா. இந்த நிலையில் இன்று பிக் பாஸில் ஒவ்வொரு வாரமும் ஆண் போட்டியாளர்களில் ஒருவர் பெண் அணியிலும் பெண் போட்டியாளர்களில் ஒருவர் ஆண் அணியிலும் விளையாடுவது வழக்கம்.

அந்த வகையில் பெண் போட்டியாளர்களில் இருந்து சௌந்தர்யா ஆண் போட்டியாளர்கள் பக்கம் செல்ல வேண்டும் என்று பேச்சுக்கள் இருந்தன இது ரசிகர்களுக்கு பயத்தை ஏற்படுத்தின. ஏனெனில் சௌந்தர்யாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருப்பது ஆண் போட்டியாளர்களுக்கு தெரியும். எனவே அவரது பெயரை கெடுக்க அவர்கள் ஏதாவது செய்யலாம் என்று நினைத்தனர். ஆனால் இறுதியில் முடிவுகள் மாற்றப்பட்டு சௌந்தர்யாவிற்கு பதிலாக சாச்சனா  அனுப்பப்பட்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version