போன வருடம் ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸை விடவும் இந்த வருடம் பிக்பாஸ் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். வழக்கமாக பிக்பாஸ் துவங்கி முதல் வாரத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற துவங்கிவிடும்.
ஏனெனில் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெறும் வகையில் ஏதாவது ஒன்றை செய்வதை பார்க்க முடியும். மேலும் பெரும்பாலும் ஒவ்வொரு போட்டியாளரும் தனி தனியாக விளையாடுவார்கள்.
இந்த வார நாமினேஷன் லிஸ்ட்
அதனால் அவர்களுக்குள் சண்டை என்பது இருந்துக்கொண்டே இருக்கும். ஆனால் இந்த முறை ஆண்கள் தனி குழுவாகவும் பெண்கள் தனி குழுவாகவும் விளையாடி வருகின்றனர். குழுவாக விளையாடும் காரணத்தினால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு விரோதம் ஏற்படுவதில்லை.
ஆண் குழுவை சேர்ந்தவர்கள் எல்லாம் அவர்களுக்குள் ஒற்றுமையாகதான் இருக்கிறார்கள். இதுதான் இந்த முறை விளையாட்டை மிகவும் மெதுவாக மாற்றிவிட்டது எனலாம். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது எதிர்பார்ப்பு குறைந்து வருகிறது.
பயந்துட்டாங்க போல
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான பிக்பாஸ் எலிமினேஷன் குறித்த அப்டேட்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த வாரம் பிக்பாஸில் ஆண் போட்டியாளர்கள் பெண்களை மட்டும்தான் நாமினேட் செய்ய வேண்டும், அதே போல பெண் போட்டியாளர்கள் ஆண்களை மட்டுமே நாமினேட் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
இந்த நிலையில் பிக்பாஸில் இந்த வாரம் ஜாக்லின், ஜெஃப்ரி, ரஞ்சித், சுனிதா ஆகியோரை நாமினேட் செய்துள்ளனர். அதில் இந்த முறை சௌந்தர்யாவின் பெயர் இல்லை என கூறப்படுகிறது.
ஏனெனில் விஜய் சேதுபதி யாருக்கு சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என நினைக்கிறீர்கள் என கேட்டப்போது சௌந்தர்யா கை தூக்கினார். அப்போது மக்களிடம் இருந்து பெரும் ஆரவாரம் கிடைத்தது. அதனை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் அவரை நாமினேஷன் செய்யவில்லை.