மெண்டல் டார்ச்சர் தாங்கல… சத்தம் போட்ட விஜய் சேதுபதி… ஆடிப்போன தர்ஷா குப்தா.. இது வேற மாறி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் கையாள்வதில் இருந்து மொத்தமாக மாறுபட்ட விதத்தில் கையாண்டு வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி விஜய் சேதுபதி பிக் பாஸுக்குள் வருகிறார் என்ற பொழுதே பலருக்கும் பலவிதமான ஐயங்கள் இருந்து வந்தது.

ஏனெனில் கமல்ஹாசன் கடந்த ஏழு வருடங்களாக பிக்பாஸை முறையாக கையாண்டு வந்தார். ஒவ்வொரு வார இறுதிகளும் கமல்ஹாசன் என்ன கமெண்ட் கொடுக்கப் போகிறார் என்பதே ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக இருந்தது.

மெண்டல் டார்ச்சர் தாங்கல

அதேபோல போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டாமல் அவற்றை நகைச்சுவையாக சுட்டிக்காட்டி பேசுவார் கமல்ஹாசன். அதனால் கமல்ஹாசனின் பேச்சு பலருக்கும் பிடித்திருந்தது.

அதேபோல வாரம் ஒரு முறை அவர் ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்வார் இதெல்லாம் இருந்து வந்தது. ஆனால் விஜய் சேதுபதி வந்த பிறகு பிக் பாஸ் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. தனக்கென்று தனி பாணியை உருவாக்கியுள்ளார்.

சத்தம் போட்ட விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்று வருகிறார் தற்சமயம் இது மக்களுக்கு பிடிக்க துவங்கி இருக்கிறது. அதிலும் மிகவும் நேரடியாக கேள்விகளை கேட்டு பதிலை வாங்கக்கூடிய திறன் வாய்ந்தவராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த வாரம் தர்ஷா குப்தா ஆண்கள் அணியினருக்கு இடையே சண்டையை மூட்டி விடுவதற்காக அர்னவ் குறித்து தவறான ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து கேட்ட விஜய் சேதுபதி மிக நேரடியாக உண்மையிலேயே அர்னவ் அப்படி கூறினாரா என்று கேட்டார்.

ஆடிப்போன தர்ஷா குப்தா

அதற்கு பதில் அளிக்கும் போது தர்ஷா மழுப்பும் விதமாக இல்லை அவர் அப்படி கூறியது போலதான் எனக்கு தெரிந்தது என்று கூறினார். உடனே விஜய் சேதுபதி அவர் கூறினாரா இல்லையா என்று மட்டும் கூறுங்கள் என்று சத்தமாக கேட்டார்.

அவர் சத்தமாக கேட்டவுடன் தர்ஷா குப்தாவிற்கு பயம் வந்துவிட்டது அவர் பயந்தபடியே விஜய் சேதுபதியை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த விஷயம் மட்டும் தற்சமயம் ப்ரோமோவில் வெளியாகி இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதியிடம் இருந்து யாருமே தப்ப முடியாது போல என்று பதில் அளித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version