ஆத்தாடி வசமா சிக்கிட்டோமே… விஷயம் தெரியாமல் ஆண்கள் டீமை கேவலப்படுத்திய தர்ஷா.. அடுத்து இருக்கு சம்பவம்..!

மற்ற மொழிகளை விடவும் தமிழில் பிக்பாஸ்க்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சீரியல் பார்க்கும் பெண்கள் கூட பிக் பாஸ் வெளியாகி வரும் காலங்களில் தொடர்ந்து சீரியலை விடவும் பிக் பாஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்டு.

இன்னும் சிலர் தொடர்ந்து லைவில் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டே இருப்பதும் உண்டு. இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமாக செல்கிறது. ஆண்கள் தனி டீமாகவும் பெண்கள் தனி டீமாகவும் விளையாடி வருகின்றனர்.

ஆத்தாடி வசமா சிக்கிட்டோமே

ஆனால் முதல் நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே ஆண்களுக்கு சாதகமாகதான் நிறைய விஷயங்கள் இதில் நடந்து வருகிறது. ஏற்கனவே ஆண்களும் பெண்களும் அவரவர் வீட்டிற்கான விதிமுறைகளை எழுதுவதற்கான வாய்ப்பு ஒன்றை கொடுத்தார் பிக் பாஸ்.

அந்த விதிமுறைகளை எழுதும் பொழுது ஆண் போட்டியாளர்கள் மிக விவரமாக நல்ல நல்ல விதிமுறைகளை எழுதி வைத்திருந்தனர். அவை பிக் பாஸால் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் பெண்கள் எழுதிய விதிமுறைகள் பலவும் சரியாக இல்லாத காரணத்தினால் அவை ஒப்புக்கொள்ளப்படவில்லை.

ஆண்கள் டீமை கேவலப்படுத்திய தர்ஷா

இதனால் ஆண்களுக்கு அட்வான்டேஜ் மிக அதிகமானது என்று கூறலாம் அதே போல ஆண்களுக்கான வீடும் பெண்களுக்கான வீடும் பிரிக்கப்பட்ட போது கூட சமையலறை, குடிதண்ணீர் போன்றவை இருக்கும் பாகத்தை ஆண்கள் எடுத்துக்கொண்டனர்.

நல்லபடியாக உறங்க வேண்டும் என்பதால் படுக்கையறை இருக்கும் பாகத்தை பெண்கள் எடுத்துக் கொண்டனர். இதுவும் ஆண்களுக்கு ஒரு அட்வான்டேஜ் ஆக போய்விட்டது. இந்த நிலையில் ஆண்களும் பெண்களும் தங்களுக்கான காய்கறிகளையும் சமையல் பொருட்களையும் கூட தனித்தனியாகதான் எடுத்துக் கொண்டனர்.

அடுத்து இருக்கு சம்பவம்

இந்நிலையில் இன்று தர்ஷா குப்தா குளிர்சாதன பெட்டியில் சில காய்கறிகள் இருந்ததை பார்த்துவிட்டு அவை நாங்கள் எடுத்தது எப்படி உங்களுடைய குளிர்சாதன பெட்டிக்கு வந்தது என்று கேள்வி எழுப்ப தொடங்கினார்.

இதனை அடுத்து பிக் பாஸிடம் இவர்கள் எடுத்த மளிகை பொருட்களின் லிஸ்ட்டை கேட்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் எடுத்த மளிகை பொருட்களின் லிஸ்ட்டை பிக் பாஸ் வழங்கி இருந்தார். அதில் அந்த குளிர்சாதன பெட்டியில் இருந்த பொருட்கள் எல்லாம் ஆண்கள் எடுத்ததுதான் என தெரிந்தது.

இது தெரியாமல் ஏற்கனவே தர்ஷா குப்தா எதற்காக திருடுகிறீர்கள் என்று பேசி இருந்தார். இதனால் கடுப்பான ஆண் போட்டியாளர்கள் தற்சமயம் தர்ஷா குப்தாவிற்கு பதிலடி கொடுக்க இருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version