என்னடா சொல்றீங்க.. ரவீந்தர் Evicted.. ஜாக்குலினை காப்பாற்ற இப்படி ஒரு திட்டமா?

பிக் பாஸ் சீசன் 8 தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் வேளையில் யார் வெளியேறுவார்கள் என்ற பேச்சு அரசல் புரசலாக காலை முதலில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த ஷோவில் கலந்து கொண்டால் நிச்சயமாக ஒரு பெரிய இடத்திற்கு செல்லக்கூடிய நிலைமை கிடைக்கும் என்று ரீதியில் அனைத்து போட்டியாளர்களும் ஆர்வத்தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

என்னடா சொல்றீங்க.. ரவீந்தர் Evicted..

விஜய் டிவியில் கடந்த ஏழு சீசங்களை தொகுத்து வழங்கிய உலகநாயகனை போல மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் விஜய் சேதுபதி நட்போடு பழகியதை அடுத்து நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் ரசிகர்கள் ரசிக்கும்படியாகவும் சென்று வந்த வேளையில் முதல் முதலாக போட்டியிலிருந்து விஜய் சேதுபதியின் ரீல் மகள் வெளியேற்றப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தற்போது யார் யார் அடுத்தடுத்து வெளியே இருக்கிறார்கள் என்ற கணிப்புகள் ஓட்டுக்களின் அடிப்படையில் காலை முதல் வெளிவந்து பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வரிசையில் தற்போது பேட்மேன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தயாரிப்பாளர் ரவீந்தர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டதாக கிசுகிசுக்கள் வெளி வந்துள்ளது.

இதை பார்த்து பிக்பாஸ் சீசன் 8 ரிவ்யூ செய்பவர்கள் இவருக்கு ஏற்கனவே வெளியில் பலர் எப்போது வெளியே வருவார் என்று காண்டாக இருப்பது இவரே போட்டி ஆரம்பிக்கும் போது சொல்லி இருந்ததை நினைவுப்படுத்தி சொல்லி வருகிறார்கள்.

ஜாக்குலினை காப்பாற்ற இப்படி ஒரு திட்டமா?

அந்த வகையில் இவர் வெளியேற வாய்ப்பு தற்போது இல்லை எனினும் சௌந்தர்யா மற்றும் முத்துக்குமார் இருந்த நிலையில் அவர்கள் இருவரும் தற்போது சேப் ஜோனில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து நடிகர் ரஞ்சித் இந்த இடத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு ஓட்டே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. எனினும் ரவீந்தர் போட்ட பிராங்க் மூலம் அதிக அளவு ஓட்டினை ரஞ்சித் பெற்றுவிட்டார்.

அடுத்தது பேட்மேன் ஜாக்குலின் அருண் போன்றவர்கள் இருக்கிறார்கள். இதில் ஜாக்குலின் மற்றும் அருண் தான் ஓட்டுக்களை இல்லாமல் தற்போது இருக்கிறார்கள்.

ஜாக்குலின் விஜய் டிவியின் ப்ராடக்ட் என்பதால் அவ்வளவு எளிதாக அவரை வெளியேற்ற மாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களாக இவருக்கு விஜய் டிவியில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதை ஆரம்பத்தில் இருந்தே இந்த ஷோவில் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு கன்டன்ட்டை ஜாக்லின் கொடுத்துக் கொண்டே இருப்பதால் மக்கள் மத்தியில் அது ரீச் ஆகக்கூடிய காரணத்தில் இருப்பதால் அவரை வெளியேற்றுவது சற்று கடினமான விஷயமாக தான் இருக்கும்.

இதை அடுத்து யார் வெளியேறுவார்கள் என்று பார்க்கும் போது அருணை தான் சொல்ல வேண்டும் என்று நாம் நினைத்தாலும் அருண் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் கம்மியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ரஞ்சித்து தான் வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது.

எனவே பொறுத்திருந்து பார்த்தால் எது நடக்கும் என்பது விரைவில் தெரியும் அதுவரை நாம் காத்திருக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version