முத்துக்குமரனுக்கும் பெண் போட்டியாளருக்கும் இடையே வந்த காதல்… இது என்னப்பா புது கூத்து..!

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் எல்லா போட்டியாளர்களும் தங்களுக்கு என தனி இடத்தை மக்கள் மத்தியில் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். ஏனெனில் பிக் பாஸ் போட்டியை பொறுத்தவரை எவ்வளவு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு போட்டியிலும் அதிக நாட்கள் இருக்க முடியும்.

அதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களும் தனித்துவமாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டி இருக்கிறது.

கலக்கும் முத்துக்குமரன்:

இதனால் தான் சௌந்தர்யா, ஆர்.ஜே ஆனந்தி மாதிரியான ஒரு சில போட்டியாளர்கள் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஏனெனில் போட்டி துவங்கியது முதலே அவர்கள் பெரிதாக எதுவும் செய்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கவே இல்லை.

இந்த நிலையில் முத்துக்குமரன் ஆண்கள் போட்டியாளர்களில் அதிக வரவேற்பு பெரும் போட்டியாளராக இருக்கிறார். தொடர்ந்து அவரைக் குறித்து நல்லவிதமான விமர்சனங்கள் மக்கள் மத்தியில் வருவதை பார்க்க முடிகிறது.

பெண் போட்டியாளர்களிடம் காதல்:

போட்டியிலும் கூட எந்த ஒரு தவறான வார்த்தைகளையும் பயன்படுத்தாமலேயே மிக நேர்த்தியாக போட்டியை விளையாடி வருகிறார் முத்துக்குமரன். இந்த நிலையில் அதை இன்னும் பிரபலப்படுத்தும் வகையில் முத்துக்குமரனின் காதல் என்று பெரிதாக கிளப்பி இருக்கின்றனர் ரசிகர்கள்.

அதாவது தர்ஷா குப்தா ஒரு வாரம் மட்டும் பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் அணியினரோடு பங்கேற்ற வந்தார். அப்பொழுது முதலே தர்ஷா குப்தாவிற்கு அனுகூலமான நிறைய விஷயங்களை முத்துக்குமரன் செய்ததாக கூறப்படுகிறது.

புதுக்கூத்து:

எனவே தர்ஷா குப்தாவிற்கும் முத்துக்குமரனுக்கும் இடையே காதல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல தர்ஷா குப்தாவும் முத்துக்குமரனும் பேசிக்கொள்ளும் விதமும் அப்படித்தான் இருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.

ஆனால் இது முத்துக்குமரனின் பெயரைக் கெடுப்பதற்காக அவர்களுக்கு எதிராக இருக்கும் ரசிகர்கள் செய்யும் செயலாகவும் இருக்கலாம் ஏனெனில் பெண்களை பொறுத்தவரை அவர்களிடம் இருந்து அதிகமாக ஒதுங்கி இருப்பவராக தான் முத்துக்குமரன் இருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam