இவ்வளவு நல்லா விளையாட கூடாதே.. பாராட்டி பழி வாங்கிய பெண்கள் அணி.. துக்கத்தில் இருக்கும் முத்துக்குமரன்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் ஒரு சில போட்டியாளர்களில் முக்கியமானவராக முத்துக்குமரன் இருந்து வருகிறார்.

முத்துக்குமரன் பிக் பாஸ்க்கு சென்ற முதல் வாரத்தில் பெரிதாக அவரது விளையாட்டில் எதுவும் மாற்றம் தெரியவில்லை. ஆனால் போகப் போக அவர் மிகச் சிறப்பாக விளையாட துவங்கி விட்டார். ஒவ்வொரு முறையும் பெண்கள் அணியுடன் போட்டி போடும்போது அதில் முக்கியமான பாயிண்டுகளை எடுத்து வைக்கும் போட்டியாளராக முத்துக்குமரன் தான் இருந்து வருகிறார்.

நல்லா விளையாட கூடாதே

இதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் முத்துக்குமாருக்கு ரசிகர்கள் அதிகரிக்கத் துவங்கி இருக்கின்றனர். பெண்கள் மத்தியிலும் தற்சமயம் முத்துக்குமரனுக்கு இருக்கும் வரவேற்பு அதிகரிக்க துவங்கியிருக்கிறது. ஏனெனில் பிக் பாஸில் விஜய் சேதுபதியுடன் முத்துக்குமரன் பேசும் பொழுதெல்லாம் அவருக்கு மக்கள் மத்தியில் இருந்து ஆரவாரம் வருவதை போட்டியாளர்கள் கவனிக்கின்றனர்.

எனவே முத்துக்குமரன் இனி ஸ்கோர் செய்ய விடக்கூடாது என்கிற ரீதியில் அடுத்த விளையாட துவங்கியிருக்கின்றனர். இந்த வகையில் இந்த வாரம் ஒரு புது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் நாள் பெண்கள் அணியினர் ஒரு ஹோட்டல் நடத்துவதாகவும் அதில் ஆண்கள் அணியினரை சேர்ந்தவர்கள் விருந்தாளிகளாக செல்வது போலவும் போட்டி நடத்தப்பட்டது.

பழி வாங்கிய பெண்கள் அணி

அதே போட்டி தற்சமயம் மாற்றப்பட்டு ஆண்கள் அணியினர் ஹோட்டல் நடத்துவது போலவும் அதில் பெண்கள் கஸ்டமர்களாக பங்கேற்பதற்கும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்சமயம் அந்த போட்டியில் ஹோட்டல் மேலாளராக முத்துக்குமரன் இருந்து வருகிறார்.

வேண்டுமென்றே பெண்கள் அணியினர் சேர்ந்து முத்துக்குமரன் சரியாக பங்கேற்கவில்லை என்று கூறியதை அடுத்து பிக் பாஸ் தற்சமயம் முத்துக்குமரனுக்கு பதிலாக வேறு ஒரு ஆளை மேலாளராக மாற்றும் படி கூறியிருக்கிறார். இப்படி எல்லா போட்டிகளிலும் பங்கு பெறாமல் செய்து முத்துக்குமரனை ஓரம் கட்டலாம் என்பது பெண்கள் அணியின் எண்ணமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam