பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர் முத்துக்குமரன் குறித்து பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் சர்ச்சைக்குரிய நடிகையுமான வனிதா விஜயகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.
நடிகை வனிதா விஜயகுமார் பற்றி புதிதாக சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சர்ச்சைக்கு பேர் போன இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானார்.
அதற்கு முன்பே தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தவர். மூன்று திருமணம் செய்துவிட்டு மூன்றையும் விவாகரத்து செய்தவர் நடிகை வனிதா விஜயகுமார்.
தற்போது நான்காவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் எட்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கும் பிரபல தொகுப்பாளரும் வி.ஜேவுமான முத்துக்குமரன் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது முத்துக்குமரனை எனக்கு நன்றாக தெரியும். அவன் ஒரு கேடி. ஒரு முறை என்னிடம் பேட்டி எடுக்க வந்திருந்தான். அப்போது பேட்டி தொடங்கியதில் இருந்து முடியும் வரை நீங்கள் அடுத்த திருமண உறவுக்குள் எப்போது செல்ல போகிறீர்கள்..?
உங்களுடைய அடுத்த திருமணம் எப்போது..? இதையேதான் திருப்பி திருப்பி கேட்டுக்கிட்டு இருந்தான். அவனை நான் மறக்கவே மாட்டேன். அவன் சரியான கேடி. அவன் எடுத்த அந்த பேட்டி செம்ம வைரலாக போனது என பேசி இருக்கிறார்.
இவருடைய இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.