ஆசையா இருந்த ரசிகர்களுக்கு விபூதி அடிச்ச பிக்பாஸ்.. அந்த நடிகையை தூக்கிட்டாங்களாம்.. காரணம் கேட்டு கடுப்பான ஃபேன்ஸ்.!

இந்தியா முழுவதும் அக்டோபர் மாதம் துவங்கிவிட்டது என்றால் நவராத்திரி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் காரணமாக அதிக மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஆனால் அதே சமயம்  பிக் பாஸ் நிகழ்ச்சியும் அக்டோபர் மாதம் தான் துவங்குகிறது என்பதால் அறிகுறித்தும் இப்பொழுதே மக்கள் அதிக ஆர்வமாக இருக்க துவங்கி இருக்கின்றனர்.

ஏனெனில் பொதுவாக பிரபலங்கள் என்று மக்கள் பார்க்கும் மனிதர்கள் அனைவருமே பொய்யான ஒரு பிம்பத்தைதான் மக்கள் மத்தியில் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சி தான் வெளிப்படுத்துகிறது.

ஆசையா இருந்த ரசிகர்கள்

எனவே பிக்பாஸில் யாராவது ஒரு பிரபலம் கலந்து கொள்கிறார்கள் என்றாலே முதலில் அவர்களை 24 மணி நேரமும் பார்க்க முடியும் என்பதே ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் ஒரு விஷயமாக இருக்கிறது. அடுத்து அவர்கள் உண்மையிலேயே எப்படிப்பட்ட கேரக்டர் என்பதை தெரிந்து கொள்வதில் மக்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் முக்கிய நடிகைகள் பலரையும் பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து போட்டியாளராக சேர்த்து வருகின்றனர். ஆனால் இன்னும் தென்னிந்தியாவில் குறைவாகவே நடிகைகள் பிக்பாஸிற்கு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

நடிகை பூனம் பஜ்வா:

இந்த நிலையில் நடிகை பூனம் பஜ்வா இந்த முறை விஜய் டிவி பிக் பாஸில் கலந்து கொள்ளப் போகிறார் என்று ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு காலகட்டத்தில் பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகையாக இருந்தார்.

அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமும் இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வேலையாக வைத்திருக்கிறார் பூனம் பஜ்வா. எனவே பூனம் பஜ்வா பிக் பாஸ் வந்தால் அது ஒரு கவர்ச்சி நிகழ்ச்சியாக மாறிவிடும்  என்பது ரசிகர்களின் அனுமானமாக இருந்தது.

கடுப்பான ரசிகர்கள்:

இதனாலேயே இளைஞர்கள் பலரும் பூனம் பஜ்வா பிக் பாஸ் வரவேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தனர். ஆனால் பூனம் பஜ்வாவை பிக்பாஸிற்கு தேர்ந்தெடுக்கவில்லை என்று தற்சமயம் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஏனெனில் பூனம் பஜ்வாவிற்கு பெரிதாக தமிழ் தெரியாது.

அதனால் அவர் பேசுவது மக்களுக்கு புரியாது என்பதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது ரசிகர்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. நமீதாவிற்கும் கூடதான் சரியாக தமிழ் தெரியாது ஆனால் அவரை எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளவில்லையா? அந்த மாதிரி பூனம் பஜ்வாவையும் சேர்த்துக் கொள்ளலாமே என்று இதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.