உங்க பசங்க என்ன நினைப்பாங்க..? எனக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க.. உடைத்து பேசிய விஜய் சேதுபதி.. கதறிய ரஞ்சித்..!

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஒருவருப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது மொத்தம் 17 போட்டியாளர்கள் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் முதல் வார முடிவில் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது நடிகர் ரஞ்சித்தை குறிப்பிட்டு அவருடைய ஒரு வார நடவடிக்கைகள் குறிப்பிட்டு தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார்

கதறிய ரஞ்சித்

முன்னதாக நடிகர் ரஞ்சித் சகப் போட்டியாளர்கள் தன்னை போலியானவர் என்று பட்டம் கொடுத்து ஸ்டிக்கர் ஒட்டியதால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார்.

இதனால் சக போட்டியாளர்கள் சிலரிடம் சண்டைக்கு சென்றார் ரஞ்சித். குறிப்பாக தயாரிப்பாளர் ரவீந்தருடன் உங்களால் தான் எனக்கு போலியானவர் என்ற பெயரை பட்டத்தை போட்டியாளர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

நீங்கள் பிராங்க் என்று ஒரு விஷயத்தை செய்தீர்கள்.. அதில் என்னுடைய பெயரையும் சேர்த்து விளையாடியதன் காரணமாக இன்று பலரும் என்னை போலியானவர் என்று ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்கள் என எகிரினார்.

அதனைத் தொடர்ந்து கேமரா முன்பு வந்து தன்னுடைய குழந்தைகளிடம் தன்னுடைய நிலை குறித்து உருக்கமாக பேசியிருந்தார் பேசி கதறினார்  நடிகர் ரஞ்சித்.

உங்க பசங்க என்ன நினைப்பாங்க

இந்நிலையில் வார இறுதி நாளான இன்று ரஞ்சித்துடன் உரையாடிய போது வீட்டில் உள்ள அனைவரும் உங்களுக்கு போலியானவர் என்று ஸ்டிக்கர் ஒட்டினார்கள். அது வெறும் விளையாட்டு மட்டும்தான். உண்மையான ரஞ்சித் யார்..? என்று உலகுக்கு தெரியும்.

உங்களுக்கு எத்தனை பசங்க என்ற கேள்வி எழுப்பினார். இதனை கேட்டு ரஞ்சித் எனக்கு இரண்டு பசங்க என்று கூறினார். அவர்களுக்கு என்ன வயசு என்று கேட்டார் ஒருவருக்கு 13 வயது ஒருவனுக்கு 15 வயது என கூறினார் ரஞ்சித்.

உங்களுக்கு போலியானவர் என்று ஸ்டிக்கர் ஒட்டியதை பார்த்து உங்களுடைய பசங்க என்ன நினைப்பாங்க..? எப்படி புரிந்து கொள்வார்கள்..? என்று நான் சொல்லட்டுமா..? அவர்கள் உங்களை போலியானவர் என்று நம்பவே மாட்டார்கள்.

அதைப் பற்றி நீங்கள் கலங்க வேண்டாம். நீங்கள் கேமரா முன்பு சென்று உங்களுடைய குழந்தைகளிடம் இறுக்கமாக பேசியதை பார்த்து எனக்கு மனசு கஷ்டமாகிவிட்டது.

உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் யாரென்று தெரியும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நீங்கள் யாரென்று தெரியும் நீங்கள் போலியானவர்கள் என்பதை அவர்கள் நிச்சயமாக நம்ப மாட்டார்கள். இது வெறும் விளையாட்டு மட்டும் தான்.

இதைப் பற்றி நீங்கள் மேற்கொண்டு கவலைப்பட தேவையில்லை என்று ரஞ்சித்தை ஆசிவாசப்படுத்தினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version