பிக்பாஸ் சீசன் 8 :ஒவ்வொரு ஆம்பளைக்கும் இதை பண்ணுனா விட்டு தர்றோம்.. வரம்பு மீறிய ரவீந்தர்.. கடுப்பான சாச்சனா..

வெற்றிகரமாக பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. குறிப்பிட்டது போலவே நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். முதல் நாளே விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆரம்பத்தில் கொஞ்சம் நட்புடன் அனைவருடனும் பேசி வந்தாலும் கூட பிறகு விஜய் சேதுபதி கேட்க வேண்டிய கேள்விகளை சரியாக ஒவ்வொருவரிடமும் கேட்பதை பார்க்க முடிகிறது. எனவே போகப்போக பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னமும் கலைக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை பண்ணுனா விட்டு தர்றோம்

இதற்கு நடுவே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே அவர்கள் போட்டியாளர்களை போட்டிக்குள் இழுத்து விட்டிருக்கின்றனர். போனமுறை பிக் பாஸில் ஆண் பெண் இருவரையும் ஒன்றாக விளையாட விட்டதால் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற பிரச்சனை எல்லாம் உருவானது. அதனை தொடர்ந்து இந்த முறை ஆண் பெண் இருவரும் தனித்தனியாக விளையாடுவது போல பிக் பாஸ் நிகழ்ச்சியை மாற்றி இருக்கின்றனர்.

வரம்பு மீறிய ரவீந்தர்

பிக் பாஸ் வீட்டை இரண்டாகப் பிரித்து ஒரு பக்கத்தை பெண்களுக்கும் மற்றொரு பக்கத்தை ஆண்களுக்கும் வழங்கி இருக்கின்றனர். இதில் எந்த பக்கம் யாருக்கு வேண்டும் என்பதை ஆண் போட்டியாளர்களும் பெண் போட்டியாளர்களும் சேர்ந்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த நிலையில் இது குறித்த பேச்சுக்கள் சென்று கொண்டிருந்தன. இதில் பிரச்சனை என்னவென்றால் வீட்டின் ஒரு பக்கத்தில் அதிக வசதிகளும் மற்றொரு பக்கம் குறைந்த வசதிகளுடனும் இருந்து வருகிறது. இதனால் அந்த அதிக வசதி உள்ள ஒரு பக்கத்தை எடுப்பதற்கு நிறைய போட்டிகளும் இருந்து வருகிறது.

கடுப்பான சாச்சனா

இதனால் தீர்க்கமான முடிவுகளை இரு தரப்பினரும் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் இவர்களுக்கு ரவீந்தர் ஒரு புது ஆப்ஷனை கொடுத்தார். அதாவது ஆண்கள் வசதி உள்ள பக்கத்தை பெண்களுக்கு விட்டு தருகிறோம்.

அதற்கும் பதிலாக பெண்கள் எங்களுக்கு காம்ப்ளிமென்ட் தரவேண்டும் அதாவது ஒவ்வொரு ஆண் போட்டியாளருக்கும் ஒரு காம்ப்ளிமென்ட் கொடுக்க வேண்டும். அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் உதாரணத்திற்கு நாமினேஷனில் யாராவது ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று நாங்கள் கூறினால் அப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது என்று கூறினார்.

ஆனால் இந்த விஷயத்தை சாச்சனாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அது எப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு காம்ப்ளிமென்ட் செய்து தர முடியும் நாங்கள் இதே போல விட்டு கொடுத்தால் எங்களுக்கு காம்ப்ளிமெண்ட் கொடுப்பீர்களா? என்று கேட்டார் கண்டிப்பாக கொடுப்போம் என்று கூறியிருந்தார் ரவீந்தர். இந்த நிலையில் ஒரு வழியாக சமரசமாகி ரவீந்தரின் விதிமுறைகளின் படி தற்சமயம் வீடு பிரிக்கப்பட்டு இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version