பிக் பாஸைப் பொறுத்தவரை எப்படிப்பட்ட போட்டியாளர்களாக இருந்தாலும் அவர்களை அந்த போட்டி சமமாகதான் நடத்தும் என்பதுதான் அதில் இருக்கும் முக்கிய விஷயமாக இருக்கிறது.
அதில் வயதானவர்களோ அல்லது வயதில் குறைந்தவர்கள் செல்லும் பொழுது சில கடினமான டாஸ்க்குகளை செய்வது அவர்களுக்கு மிக கடினமாக மாறிவிடுகிறது. இது ஒவ்வொரு சீசனிலுமே நடந்து கொண்டுதான் இருக்கிறது.
காலை காலி பண்ணதான்
இதனால் பிக் பாஸ் சிலருக்கு பிடிக்காமல் போய் பாதியிலேயே அவர்கள் பிக் பாஸிலிருந்து கிளம்பி விடும் சம்பவங்களும் நடந்து இருக்கிறது போன சீசனில் கூட எழுத்தாளர் பவா செல்லதுரை வந்து சில நாட்களிலேயே பிக் பாஸில் இருந்து கிளம்பி சென்று விட்டார்.
அவருக்கு அதிகப்படியான மன அழுத்தம் ஏற்பட்டதுதான் அதற்கு காரணம் என்று பிறகு பேட்டியில் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த முறை ரவீந்தர் அப்படியான ஒரு நபராக சென்று மாட்டிக் கொண்டு இருக்கிறார்.
அவதியில் சிக்கிய ரவீந்தர்
ரவீந்தரை அனைவரும் ஃபேட்மேன் என்றுதான் முதலில் இருந்து அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு அதிக உடல் எடையை கொண்டவர் ரவிந்தர். இரண்டு நாட்களாக நிகழ்ச்சி துவங்கியது முதலே அவர் அதிகமாக நின்று யாரும் பார்த்திருக்க முடியாது.
அதிகபட்சம் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்துதான் இருப்பார் ரவிந்தர். அந்த அளவிற்கு உடல் எடை அதிகமாக அவருக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு டாஸ்க் வைக்கப்பட்டது ஓடி சென்று நாற்காலியில் அமர்வது போன்ற ஒரு டாக்ஸ் கொடுக்கப்பட்டது.
பிக்பாஸிற்கு குவியும் கண்டனங்கள்
அதில் அனைத்து போட்டியாளர்களுமே பங்கேற்றதாக வேண்டும் என்கிற நிலை இருந்தது. ரவீந்தர் அதில் பங்கேற்றாலும் கூட தொடர்ந்து அவரால் அதில் போட்டியிட முடியவில்லை. இந்த நிலையில் அவர் சென்று அமர்ந்து விட்டார்.
ஆனால் அவரும் எழுந்து வந்தால்தான் இந்த போட்டி நடைபெறும் என்று பிக் பாஸ் உறுதியாக கூறிவிட்டார். இதனை அடுத்து மிகவும் கஷ்டப்பட்டு அந்த போட்டியை முடித்தார் ரவீந்தர். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு மிகுந்த சோர்வு ஏற்பட்டது. இதனால் அவரால் நடக்கவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
பிறகு அவருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டது. இதனை பார்த்த ரவீந்தரின் ரசிகர்கள் மிகுந்த கோபத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். பிக் பாஸை பொருத்தவரை ஒருவரின் வயது அவருக்கு இருக்கும் உடல் பிரச்சினை போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கான டாஸ்க்குகளை வழங்க வேண்டும்.
தமிழே படிக்க தெரியாதவரிடம் வந்து தமிழில் படிக்க சொல்கிறார்களா அப்பொழுது மட்டும் ஆளை மாற்றி படிக்க சொல்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது உடல் பிரச்சினை இருக்கும் ஒரு நபரை எதற்கு இப்படி வதைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர் ரசிகர்கள்.