ரஞ்சித்காகதான் அதை செஞ்சேன்.. ரவீந்தர் அடி வாங்க என்ன காரணம் தெரியுமா? இவ்வளவு நல்லவரா இவரு?.

பிக் பாஸ் நிகழ்ச்சியானது துவங்கியது முதலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று சென்று கொண்டுள்ளது. இதற்கிடையே பிக் பாஸுக்கும் சண்டைக்கும் எப்பொழுதுமே வெகு தூரங்கள் கிடையாது என்று கூறலாம்.

எல்லா சீசனிலும் பிக் பாஸில் சண்டைகள் நடந்து வருவது வாடிக்கையான விஷயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸில் ரவீந்தர் தொடர்ந்து பிக் பாஸ் போட்டி குறித்த அனைத்து விஷயங்களையும் தெரிந்து சென்றவராக இருக்கிறார்.

ரஞ்சித்காகதான் அதை செஞ்சேன்

அதனால் பிக் பாஸிலும் அவரது ஆட்டம் என்பது தனித்துவமானதாக இருந்தது. முக்கியமாக எந்தெந்த விஷயங்களுக்கு மக்கள் அதிக வரவேற்பு கொடுப்பார்கள் என்பதை அறிந்து விளையாண்டு வருகிறார் ரவீந்தர். இந்த நிலையில் ரவிந்தர் இன்று செய்த சம்பவம் ஒன்று அதிக பிரபலம் ஆகி இருந்தது.

இன்று ரவிந்தருக்கும் ரஞ்சித்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. நடிகர் ரஞ்சித்தும் பிக்பாஸில் முக்கிய போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார் கவுண்டம்பாளையம் திரைப்படம் மூலமாக சமீபத்தில் அவர் அதிக சர்ச்சையானது.

அடுத்து சமூக வலைதளங்களில் கொஞ்சம் பிரபலமாகி இருந்தார். இதனால் இவருக்கு பிக்பாஸில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் பிக்பாஸிற்குள் வந்த ரஞ்சித் முதல் நாளில் இருந்தே மிக அமைதியாக போட்டியில் பங்கெடுத்து வந்தார்.

இவ்வளவு நல்லவரா இவரு

ஆனால் இன்று திடீரென்று அவருக்கும் ரவீந்திருக்கும் இடையே சண்டை வந்தது. அந்த சண்டையின் காரணமாக இருவருமே மிக அதிகமாக சத்தம் போட்டு கொண்டனர். அதனால் பிக் பாஸ் வீடு அதிர்ச்சிக்கு உள்ளானது. பிறகு அனைவரும் இணைந்து இவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

 

அதன் பிறகுதான் தெரிந்தது இது போலியாக சித்தரிக்கப்பட்டது என்று இவர்கள் வேண்டுமென்றே இருவரும் பேசி வைத்துக்கொண்டு சண்டையிட்டு இருக்கின்றனர். பிறகு இந்த விஷயம் தெரிந்து ஜாக்லின் போன்ற சில போட்டியாளர்கள் கடுப்பானாலும் மற்றவர்கள் இதை எளிதாக எடுத்துக் கொண்டு விட்டு விட்டனர்.

இந்த நிலையில் இது குறித்து அப்போது மற்ற போட்டியாளர்களிடம் பேசிய ரவிந்தர் கூறும் பொழுது ரஞ்சித் போட்டிக்குள் வந்ததிலிருந்து பெரிதாக எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்து வருகிறார். இதனால் அவர் போட்டியிலிருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி செய்தேன் என்று கூறி இருக்கிறார் ரவீந்தர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam