உங்க பிரச்சனைக்கு நான் ஊறுகாயா?.. கடுப்பான ரஞ்சித், சிக்கிய ரவீந்தர்.. உண்மையான சண்டை ஆரம்பிச்சிட்டு..!

முந்தைய பிக்பாஸை விட தற்சமயம் நடக்கும் பிக் பாஸ் சீசன் 8-ல் போட்டியாளர்கள் ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று வருகின்றனர்.

பெரும்பாலும் போட்டி மட்டுமில்லாமல் பொறாமையும் துவங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை என்பது அதிகமாக இருந்து வரும். ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் இருப்பதை பார்க்க முடியும்.

உங்க பிரச்சனைக்கு நான் ஊறுகாயா?

ஆனால் இந்த முறை ஆண் மற்றும் பெண் அணியினர் என்று பாலினம் ரீதியாக இருவரையும் பிரித்து வைத்து போட்டியை நடத்தி வருகின்றனர். இதில் ஆண்கள் பிரிவை பொறுத்தவரை பெரிதாக அவர்களுக்குள் குறை சொல்லிக் கொள்வதாக தெரியவில்லை.

அவர்கள் நேருக்கு நேர் பேசிக் கொள்கிறார்கள் மற்ற நேரங்களில் மிகவும் ஜாலியாக விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். ஆனால் பெண்கள் அணியினரை பொறுத்தவரை தொடர்ந்து ஆண்கள் அணியினரை குறித்து குறை கூறிக் கொண்டிருக்கிறார்களே தவிர அவர்களுக்கான ஆட்டத்தை தனித்துவமாக ஆடவில்லை.

கடுப்பான ரஞ்சித்

தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ஜாக்குலின் மாதிரியான பலரும் அவர்களுக்கென்று தனி ஆட்டத்தை இன்னும் ஆடவே ஆரம்பிக்கவில்லை என்கிற நிலை இருந்து வருகிறது. இதற்கு நடுவே இரு பக்கமும் சரியாக காய் நகர்த்தி விளையாடுகிறார் இளம் போட்டியாளர் ஜெஃப்ரி.

இதற்கு நடுவே ரவீந்தர் செய்த ஒரு விஷயம் கடந்த இரு நாட்களாக அதிக பிரச்சனையாக சென்று கொண்டிருக்கிறது. ரவீந்திரும் ரஞ்சித்தும் இணைந்து போட்டியாளர்களை பிராங்க் செய்வதற்காக ஒரு சண்டை போடுவது போன்ற விளையாட்டை செய்தனர்.

சிக்கிய ரவீந்தர்

இதன் மூலமாக ரஞ்சித்துக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துவிட்டது என்று நினைத்த பெண்கள் அணியினர் இதை ஒரு பெரிய பிரச்சனையாக மாற்றி விட்டனர். இது குறித்து தர்ஷா குப்தாவிடம் கூறும் பொழுது இந்த சண்டை காரணமாக ஒரு விதத்தில் ரஞ்சித்துக்கு வரவேற்பு கிடைக்கும் என்று கூறினார்.

இதை தர்ஷா குப்தா பெண்கள் அணியினர் முன்னிலையில் கூறியதால்தான் பிரச்சனை அதிகரித்தது. இந்த நிலையில் இது குறித்து ரஞ்சித் ரவீந்தரிடம் பேசும்பொழுது நீங்கள் என்னவோ செய்து கொள்ளுங்கள் அதற்கு எதற்கு அதில் என்னுடைய பெயரை பயன்படுத்தினீர்கள் என்று கேட்டார் இதனால் ரவீந்தர் மிகவும் கவலை அடைந்து விட்டார். தேவையில்லாமல் இந்த  விஷயத்தை கூறியிருக்கக்கூடாது என்பதுதான் இப்பொழுது அவரது மன நிலையாக இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version