சற்று முன் : பிக்பாஸ் 8 வீட்டில் ஏற்பட்ட சோக சம்பவம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! பரபரப்பு தகவல்கள்…!

சற்று முன் பிக் பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது போட்டியாளராக பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம் அவருடைய உடல் நிலை தான்.

உங்களுடைய உடல் நலத்தில் எந்த ஒரு சமரசத்தையும் நாங்கள் செய்து கொள்ள விரும்பவில்லை. மருத்துவரின் தீவிர ஆலோசனைக்கு பிறகு உங்களுக்கு தீவிரமான ஓய்வு தேவைப்படுவதால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். தயவு செய்து பிக்பாஸ் முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என பிக்பாஸ் ரவீந்தரை கேட்டுக்கொண்டார்.

ஆனால், ரவீந்தர் என்னுடைய உடல்நல பிரச்சனை காரணமாக என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம். என்னால் முடியும் என்ற நம்பிக்கை Will Power என்னிடம் இருக்கிறது, என்னை தொடர்ந்து விளையாட அனுமதியுங்கள்.

அவ்வப்போது எனக்கு மருத்துவ உதவிகள் செய்தால் மட்டும் போதுமானது. என்னால் நிச்சயமாக தொடர்ந்து இந்த போட்டியில் விளையாட முடியும் என்று கோரிக்கையை விடுத்தார்.

ஆனால், போட்டி தொடங்கிய இரண்டே நாட்கள் ஆன நிலையில் நிறைய நேரங்களில் ரவீந்தர் மயக்கம் அடைவது மற்றும் உடல் சோர்வு அடைந்து நகர முடியாத நிலைக்கு செல்வது போன்ற மோசமான உடல் நிலைக்கு சென்று இருக்கிறார்..

தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் கடுமையான உடல் தகுதியை பரிசோதிக்கும் விதமாக டாஸ்குகள் எல்லாம் கொடுக்கப்படும். அந்த நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிக்கல் ஆகிவிடும்.

எனவே உங்களுடைய உடல் நலத்தில் பிக்பாஸ் எந்த சமரசமும் செய்து கொள்ள தயாராக இல்லை எனக் கூறி ரவீந்தரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்கிறது.

இந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் இருக்கிறது. பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் நாமினேசன் மட்டும் இருக்கும். ஆனால் எலிமினேஷன் இருக்காது. இந்த சீசனில் போட்டி தொடங்கிய 24 மணி நேரத்திலேயே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். அடுத்த 24 மணி நேரத்தில் இன்னொரு போட்டியாரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version