பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் உடல்நிலையில் ரவீந்தர்..! சற்று முன் நடந்த பரபரப்பு சம்பவம்..!

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களில் கலந்து கொண்ட 24 மணி நேரத்தில் போட்டியாளர் இளம் நடிகை சாச்சனா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது. ஆனால், முதல் நாளே எளிமையாக சென்று அனுப்பப்பட்டார் ஒரு போட்டியாளர் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவருடைய உடல்நிலை பிக்பாஸ் போட்டியில் தொடர்ந்து விளையாடுவதற்கு ஒத்துழைக்குமா என்ற கேள்வி பலருக்குமே இருந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை.

அதனை நிரூபிக்கும் விதமாக ரவீந்திரன் உடல்நிலை தற்போது பிக்பாஸ் வீட்டில் பார்ப்பதற்கே கஷ்டமான ஒரு சூழல் இருக்கிறது. ஏற்கனவே ஒரு பண மோசடி வழக்கில் சிக்கி சிறை சென்ற அனுபவத்தை பகிர்ந்து இருந்த ரவீந்தர் நான் அமர்ந்தால் என்னை தூக்கி விடுவதற்கு நான்கு பேர் வேண்டும்.. நான் படுத்தால் எழுப்பி விடுவதற்கு நான்கு பேர் வேண்டும்.. கழிவறை பயன்படுத்துவது கூட கண்டிப்பாக யாராவது ஒருவர் உதவி செய்ய வேண்டும் என்றெல்லாம் தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார்.

ஆனாலும், என்னை சிறையில் அடைத்து சந்தோஷம் அடைந்தார்கள் சில துரோகிகள். அது காலத்தின் சூழ்நிலை. தற்போது ஒரு வழியாக வெளியே வந்து விட்டேன் என பேசியிருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாராக இவர் உள்ளே நுழைந்திருக்கிறார். உள்ளே உடல் உறுதியை பரிசோதிக்கும் விதமாக பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ரவீந்தர் தன்னுடைய மோசமான உடல்நலையை வைத்துக்கொண்டு எப்படி இந்த டாஸ்க்குகளில் பங்கேற்க போகிறார் என்ற கேள்வி எல்லாம் ரசிகர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சற்றுமுன் உணவருந்திய ரவிந்தர் எழுந்திருக்கவே மிகவும் சிரமப்பட்டார்.. அப்போது போட்டியாளர்கள் நான்கு பேர் அவரை கைத்தாங்களாக தூக்கி படுக்கை அறை வரை அழைத்துச் சென்று படுக்க வைத்தனர்.

இந்த காட்சிகளை பார்பதற்கே மிகவும் பரிதபமாகவும், கஷ்டமாகவும் இருப்பதாக ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version