நானும் அதை அசால்ட்டா பண்ணுவேன்.. மனைவி குறித்து பேசிய ரவீந்தருக்கு ஷாக் கொடுத்த சுனிதா..!

பிக்பாஸ் எட்டாவது சீசன் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து சுவாரஸியமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு எபிசோடுகளும் புதுப்புது டாஸ்க் கொடுப்பது இந்த சீசனை விறுவிறுப்பாக்கி இருக்கிறது.

இந்நிலையில், போட்டியாளர் சுனிதாவுடன் தயாரிப்பாளர் ரவிந்தர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார். தன்னுடைய விளையாட்டு யுக்திகளை பற்றியும் மற்ற போட்டியாளர்களின் விளையாட்டு யுக்திகளை பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்த ரவிந்தர்.

ஒரு கட்டத்தில் உணவு சம்பந்தமான பேச்சை ஆரம்பித்தபோது, நீங்கள் எவ்வளவு சாப்பிடுவீர்கள் என்று ரவீந்தரை பார்த்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ரவீந்தர்.. இங்க பாருங்க.. நான் 200 கிலோவுக்கு மேல் இருக்கிறேன். பலரும் நான் குறைவாக சாப்பிட்டால் உடல் எடை குறையலாம் என்று கூறுவார்கள்.

ஆனால் என்னுடைய உடல் எடை அதிகமாக இருப்பதால் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டால் மட்டும்தான் என்னால் இயங்கவே முடியும். என்னுடைய உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்க முடியும். அப்படி வரும் பொழுது நான் ஒரு குறிப்பிட்ட அளவு தினமும் சாப்பிட்டு ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.

மகாலட்சுமி எனக்கு தினம் தோறும் சத்தான உணவுகளை சமைத்து கொடுப்பார். அவை தான் என்னுடைய உணவு. அவரும் உடல் நலத்தில் நல்ல கவனம் செலுத்தக் கூடியவர். என்னுடைய உடல் நலத்திலும் கவனம் செலுத்தக் கூடியவர் என தன்னுடைய மனைவி குறித்து பேசினார் ரவீந்தர்.

மேலும், பர்கர் போன்ற உணவுகள் என்றால் ஒரே நேரத்தில் மூன்று பர்கர் கூட சாப்பிடுவேன். அப்படி மூன்று பர்கரை சாப்பிட்டாலும் நீங்கள் எல்லாம் ஒரு அரை பர்கர் சாப்பிட்டால் எப்படி உணர்வீர்களோ.. அதுபோலத்தான் நான் மூன்று பர்கர் சாப்பிட்ட பிறகும் உணர்வேன். அதுவே எனக்கு குறைந்த அளவு தான். அதை சாப்பிட்டால் மட்டும்தான் எனக்கு ஓரளவுக்கு உடம்பில் வலுவிருக்கும். எனக்கு இயங்குவதற்கு தேவையான சக்தி கிடைக்கும் எனக்கு கூறினார்.

தோசை என்று வந்தால் நான் ஒரு ஐந்து தோசை சாப்பிடுவேன் என கூறினார் ரவீந்தர். இதைக்கேட்ட சுனிதா கோகோய்.. என்னது.. ஐந்து தோசையா..? நானும் ஐந்து தோசை அசால்டாக சாப்பிடுவேன் என்று ரவீந்திரிடம் கூறினார்.

இதைக் கேட்டு ஷாக்கான ரவீந்தர்.. அம்மா.. நீங்கள் ஐந்து தோசை சாப்பிட்டால் வயிறு நிறைந்தது போல உணர்வீர்கள். நான் அந்த ஐந்து தோசையை சாப்பிட்டாலும் அரை தோசை சாப்பிட்ட உணர்வு தான் எனக்கு இருக்கும்.

உங்களிடம் அரை தோசையை கொடுத்து இதுதான் உன்னுடைய உணவு என்று சொன்னால் எப்படி இருக்கும்..? என்று சுனிதாவிடம் கேட்டார். இதைக் கேட்டு ஷாக்கான சுனிதா கண்டிப்பாக அது போதாது என்று கூறினார்.

தொடர்ந்து பேசி ரவீந்தர் அதேபோலத்தான் ஐந்து தோசை சாப்பிட்டாலும் எனக்கு அரை தோசை சாப்பிட்ட உணர்வு தான் இருக்கும். அந்த அளவுக்கு எனர்ஜி தான் எனக்கு கிடைக்கும் என பேசினார்.

இதைக் கேட்ட ரசிகர்கள் ரவீந்திரின் உடல் நிலையை கேட்டு சற்று கலக்கமடைந்து இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். தினந்தோறும் ஒரு வேலைக்கு அரை தோசை அரை பர்கர் என்று கொடுத்தால் நாம் எப்படி உணர்வோமோ.. அதைத்தான் அவர் ஐந்து தோசை உட்கொண்டாலும் உணர்கிறார் என்றால் நிச்சயமாக அவருடைய வாழ்க்கை பயணம் ஒரு கடினமானது தான்.

இருந்தாலும் அவருடைய உருவத்தை வைத்து சிலர் கேலி செய்வதை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது என்று தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version