என்ன சிம்ரன் இதெல்லாம்.. அதுவும் நேஷனல் மீடியாவுல.. மெச்சூரிட்டி இல்லாத சாச்சனாவின் பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கூடிய சாச்சனா தான் செய்த மோசமான வேலை குறித்து சக போட்டியாளர்களிடம் வெளிப்படையாக கூச்சம் இன்றி போட்டு வைத்திருக்கிறார்.

இதனால் போட்டியாளர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கொடுமையை பார்த்து ரசிகர்கள் அதைவிட அதிகமாக ஷாக் ஆகி கிடக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

சகபெண் போட்டியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்த நடிகை சாச்சனா நான் அழகான ஒரு செயின் வாங்கியதாகவும் அந்த செயினை வாங்கிய கடையிலேயே தொலைத்து விட்டேன் என்றும் அதனால் அந்த கடையில் இருந்த செயினை திருடி வந்து விட்டேன் என்றும் பேசி இருக்கிறார்.

இதனை கேட்ட பின்பு போட்டியாவர்கள் இது உனக்கு சரியான படுகிறதா..? நீ செய்தது தவறு..? என சொல்லி ஷாக் ஆகிறார்கள்.

ஒரு தேசிய அளவில் இயங்கும் ஒரு மீடியாவில் எப்படி தான் செய்த திருட்டுத்தனத்தை வெளிப்படையாக கூறுகிறார் இந்த போட்டியாளர் சாச்சனா..?

இவர் சுவாரசியம் என நினைத்துக் கொண்டு தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் பல்வேறு விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார்.

இவருடைய மெச்சூரிட்டி என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. மெச்சூரிட்டி இல்லாமல் நிறைய இடங்களில் தவறான விஷயங்களை பதிவு செய்கிறார்.

இப்படி குழந்தைகளை பிக்பாஸ் போட்டியில் போட்டியாளராக உள்ளே அனுப்பியது தவறு. இவர் முதல் வாரம் வெளியேற்றப்பட்டது அப்படியே இருந்திருக்கலாம். உள்ளே வந்தது முதல் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் தான் சிக்கி வருகிறார்.

தற்போது தான் திருடிய விஷயத்தை வெளிப்படையாக ஒரு தேசிய மீடியாவில் ஒப்புக்கொள்கிறார். இதற்கு எல்லாம் என்ன தண்டனை..? என்று கேள்வி எழுப்புகிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.

முன்னதாக பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் சரவணன் தன்னுடைய கல்லூரி காலத்தில் செய்த ஒரு தவறுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சாச்சனா இப்படி செய்ததும் தவறுதான் இதற்கு பிக் பாஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version