சாச்சனா உள்ள வர இந்த நபர்தான் காரணம்.. பிக்பாஸ்ன்னு சொல்லிட்டு இதெல்லாம் பண்றீங்களே..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை சில விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் இந்த நிகழ்ச்சியே நடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக நிகழ்ச்சியில் யார் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்பதை பொதுமக்கள்தான் முடிவு செய்வார்கள்.

இதற்காகதான் ஓட்டு போடும் முறை இருந்து வருகிறது. கடைசி வரை இருந்து யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது மக்கள் அதிகபட்சமாக யாருக்கு ஓட்டு போடுகிறார்கள் என்பதன் அடிப்படையில் தான் இருந்து வருகிறது.

சாச்சனா உள்ள வர இந்த நபர்தான் காரணம்

ஆனால் இந்த முறை பிக் பாஸில் வித்தியாசமாக ஒரு நிகழ்வு நடந்தது அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய 24 மணி நேரத்திற்குள் ஒரு போட்டியாளர் நீக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்தது.

இது போட்டியாளர்கள் பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிலையில் இதற்கான நாமினேஷனை போட்டியாளர்களிடம் நடத்தினர் அதில் சாச்சனாவிற்கு அதிக வாக்குகள் உருவான நிலையில் சாச்சனாவை போட்டியிலிருந்து நீக்கினர்.

எலிமினேஷனில் உள்ள தவறு

ஆனால் இது பிக் பாஸ் விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது என்று ரசிகர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்க துவங்கினர். ஏனெனில் எப்பொழுதுமே பிக் பாஸில் இப்படி ஒரு நடைமுறை இருந்ததே கிடையாது.

யார் போட்டியிலிருந்து நீங்க வேண்டும் என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சியே முடிவு செய்தது போல இருந்தது. மேலும் சாச்சனா விஜய் சேதுபதி திரைப்படமான மகாராஜா திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.

இதெல்லாம் பண்றீங்களே

அதிலும் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததால் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. இந்த நிலையில் அர்ச்சனா வெளியேறியது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் விஜய் சேதுபதிக்குமே இது சரியாகப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து சாச்சனா விஜய் சேதுபதியிடம் சென்று அழுததாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில்தான் விஜய் சேதுபதி மீண்டும் விஜய் டிவியிடம் பேசி சாச்சனாவை போட்டிக்குள் வரவழைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version