பிக்பாஸ் 8: என்னங்கடா அப்பன் முன்னாடியே இப்படி பண்றீங்க.. ஆரம்பத்துலயே அலப்பறை கிளப்பிய விஜய் சேதுபதி..!

தமிழ் மக்கள் அனைவரும் பெரிதாக எதிர்பார்த்து வந்த நிலையில் தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் துவங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரிசையாக ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில் இதில் இரண்டாவது போட்டியாளராக யாரும் எதிர்பார்க்காத நிலையில் நடிகை சாச்சனா நமீதாஸ் பிக் பாஸில் களம் இறங்கி இருக்கிறார்.

என்னங்கடா அப்பன் முன்னாடியே:

பிக் பாஸில் யாரெல்லாம் போட்டியாளராக வரப் போகிறார்கள் என்பது குறித்து ஏற்கனவே நிறைய வதந்திகள் இருந்து வந்தன. அதில் சில உண்மையாகவும் இருந்தன. ஃபேட்மேன் என அழைக்கப்படும் ரவீந்திரன் நடிகை தர்ஷா குப்தா மற்றும் சீரியல் நடிகர் தீபக் போன்றவர்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது ஏற்கனவே அனுமானிக்கப்பட்டதாக இருந்தது.

ஆனால் சாட்சனா இதில் கலந்து கொள்வார் என்பது யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயமாக இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகதான் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கு முயற்சி செய்து வந்து கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்துலயே அலப்பறை

சாச்சனா இவர் முதன்முதலாக 2023 இல் வெளியான ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் அதனை தொடர்ந்து மகாராஜா திரைப்படத்தின் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக இவர்தான் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் மிகவும் தைரியசாலியான ஒரு கதாபாத்திரமாக சாச்சனா நடித்திருப்பார். அதற்குப் பிறகு அவருக்கு நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற ஒரு திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

சாச்சனா எண்ட்ரி:

அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் இவர் நடித்த திரைப்படங்களிலேயே மகாராஜா திரைப்படம்தான் இவருக்கு ஒரு அடையாளமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனாவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருப்பது விஜய் சேதுபதிக்கு ஒரு  ஒரு சர்ப்ரைஸ் ஆன விஷயமாக தான் இருந்து வருகிறது.

இந்த நிலையில் மேடைக்கு சச்சனா வந்தவுடனேயே ரசிகர் கூட்டத்தில் இருந்த ஒருவர் சாச்சனா என்று சத்தமாக கத்தினார். உடனே விஜய் சேதுபதி அவளுடைய அப்பன் நிற்கும்பொழுதே என் பொண்ண கூப்பிடுகிறீர்களா? என்று நகைச்சுவையாக கூறினார்.

மேலும் அவர் சாச்சனாவிடம் எதுக்கு நீ இங்க வந்த? என்று கேட்டார் இந்த நிலையில் கமல்ஹாசனில் இருந்து விஜய் சேதுபதியின் அணுகுமுறை என்பது மொத்தமாக பிக் பாஸில் மாறி இருப்பதை பார்க்க முடிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version