மீண்டும் உள்ளே நுழைந்த சாச்சனா..! வந்ததும் பார்த்த முதல் வேலை..! போட்டியாளர்கள் ஷாக்..!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் போட்டியாளர் சாச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த மகாராஜா திரைப்படத்தின் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்த இவர் 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள உள்ளே நுழைந்திருக்கிறார்.

ரகசிய வழியாக உள்ளே நுழைந்த இவர் உள்ளே நுழைந்ததும் போட்டியாளர்கள் குறித்து வெளியே மக்களின் மனநிலை என்ன என்ற தன்னுடைய பார்வையை வெளிப்படையாக லிவிங் ஏரியாவில் அனைவரையும் அமர வைத்து கூறுகிறார்.

இதில் முக்கியமாக மூன்று நபர்களை சுட்டிக்காட்டுகிறார் சாச்சனா. அதில் குறைவான கண்டெண்ட் கொடுக்கக்கூடிய டாப் 3 நபர்கள் யார் என்று கேட்டால் சத்யா, நடிகர் ரஞ்சித், விஜே விஷால் இவர்கள் மூவரும் கண்டென்டுகளை குறைவாக கொடுக்கின்றனர்.

வெளியில் இவர்களைப் பற்றி பேச்சே எதுவும் கிடையாது என்பது போல பேசுகிறார். இப்படியாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இவர் மீண்டும் போட்டியாளராக தொடர்வாரா..? அல்லது சிறப்பு விருந்தினராக அவ்வப்போது வந்து செல்வாரா..? என்பது குறித்த கேள்விகேள்விக்கு விடை கிடைக்காமல் குழம்பி இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இன்றைய எபிசோடில் இது குறித்து விடை தெரிய வரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version