பிக்பாஸ் சீசன் 8 : அந்த விஷயத்தில் ரொம்ப மோசம்.. தர்ஷா குப்தா, சௌந்தர்யாவை கழுவி ஊத்தும் ரசிகர்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்பை விடவும் இந்த முறை பெண் போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஏனெனில் ஆண் போட்டியாளர்களும் பெண் போட்டியாளர்களும் தனித்து நின்று அவர்களுக்குள் போட்டி நடக்கப்போகிறது என்பதால் ஆண் போட்டியாளர்களுக்கு சமமான அளவில் பெண் போட்டியாளர்களையும் சேர்த்து இருக்கின்றனர்.

எப்போதுமே பெண் போட்டியாளர்களுக்கு பிக் பாஸில் அதிக முக்கியத்துவம் உண்டு. ஏனென்றால் ரசிகர்கள் பலரும் பெண் போட்டியாளர்களுக்கு ரசிகர்களாக மாறுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

அந்த விஷயத்தில் மோசம்

ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் ஏதாவது ஒரு பெண் போட்டியாளர் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்து இருப்பதை பார்க்க முடியும். அந்த வகையில் இந்த முறை நிறைய பெண்கள் போட்டியாளர்களாக இருப்பதால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு வரவேற்பு அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போதுமே பிக் பாஸில் தமிழ் படிப்பது என்பது ஒரு பிரச்சனையாக ஆகிக் கொண்டே இருக்கிறது. போன சீசனில் ஜோவிகா தமிழ் படிக்க தெரியாமல் திண்டாடியது அதிக வைரலாகி வந்தது.

மோசம் செய்த தர்ஷா குப்தா

ஆனால் போன சீசனிலாவது ஜோவிகா மட்டும்தான் அப்படி இருந்தார் ஆனால் இந்த முறை நிறைய பேர் அப்படி இருப்பதை பார்க்க முடிகிறது. இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய விதிமுறைகளை பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

இந்த விதிமுறைகளை படிப்பதற்காக யாரையாவது வர சொல்லி அழைத்தார். இந்த நிலையில் ஆர்வம் கொண்டு முதலில் தர்ஷா குப்தா அதை படிப்பதற்காக அங்கு சென்றார். உண்மையில் தர்ஷா குப்தா அந்த விதிமுறைகளை நல்லபடியாகதான் படித்தார்.

கழுவி ஊத்தும் ரசிகர்கள்

ஆனால் படிக்கும் பொழுதே அதில் அதன் அர்த்தம் என்ன என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனை பார்த்த பிக் பாஸ் வேறு யாரையாவது வரும்படி அழைத்தார். அதனை தொடர்ந்து சௌந்தர்யா நஞ்சுண்டன் அடுத்து படிப்பதற்காக சென்றார்.

அவருக்கு படிப்பதற்கு அவ்வளவாக வரவில்லை. இது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் வெளியில் சென்று  அந்த இரண்டு பக்கங்கள் எழுதி இருக்கும் விஷயங்களை படிப்பது கடினமாக இருக்கிறது என்று பேசிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பிறகு தீபக் சென்று அந்த விஷயங்களை படித்துவிட்டு வெளியில் வந்து அறிவித்திருக்கிறார் இதைபார்த்த ரசிகர்கள் இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை அடுத்தடுத்து வரும் தலைமுறைக்கு சுத்தமாக தமிழே தெரியாது போல இருக்கே என்று கூறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version