இதுக்கு தான் எனக்கு சிங்கிள் பெட் வேணும்.. கூச்சமின்றி கூறிய சுனிதா..! விளாசிய விஜய் சேதுபதி..!

விஜய் டிவி ரியலிட்டி மற்றும் நடன நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்று ரசிகர் மத்தியில் தெரிந்த முகமாக இருப்பவர் சுனிதா கோகோய்.

இவர் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நகைச்சுவையான தன்னுடைய பேச்சாளர் ரசிகர்களின் கவர்ந்திருக்கிறார்.

தற்போது பிக்பாஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். ஒரு வாரம் பிக்பாஸ் வீட்டில் தங்கி தாக்குப் பிடித்திருக்கும் சுனிதா வார இறுதிநாளான இன்று விஜய் சேதுபதியுடன் உரையாடினார்.

அப்போது விஜய் சேதுபதி சுனிதாவிடம் ஒரு கேள்வி எழுப்பினார். நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததிலிருந்து ஏதோ ஒரு நம்பிக்கையில் 100 நாள் இந்த வீட்டில் இருப்பேன் என்ற முறையிலேயே உங்களுடைய நடவடிக்கைகள் இருக்கிறது.

குறிப்பாக உள்ளே நுழைந்ததும் இந்த படுக்கை அறை தான் வேண்டும் என்று நீங்கள் எதற்காக தேர்வு செய்தீர்கள்..? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுனிதா உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு சிங்கிள் பெட் எதற்காக வேண்டுமென்றால் என்னுடைய பொருட்கள் மற்றும் உடைகளை ஓரிடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வைக்க வேண்டும் என்றால் தனியாக ஒரு கட்டில் இருந்தால் தான் அதற்கு முடியும்.

சிங்கிள் பெட்டில் ஒரே ஒரு சேமிப்பு பகுதி மட்டும் தான் இருந்தது எனவே அதை நான் முழுதாக பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் என்னுடைய உடமைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்துதான் நான் சிங்கிள் பெட்டை தேர்வு செய்தேன் எனக் கூறினார் சுனிதா.

இதைக் கேட்ட விஜய் சேதுபதி, நான் மறுபடியும் கூறுகிறேன். நீங்கள் வந்ததிலிருந்து உங்களுடைய நடவடிக்கைகள் எல்லாமே 100 நாட்கள் இந்த வீட்டில் நான் தங்கியிருப்பேன் என்ற ஒரு அபரிமிதமான நம்பிக்கையிலேயே இருக்கிறது.

அதை நிரூபிக்கும் விதமாகத்தான் நீங்கள் இப்போது இந்த பதிலையும் கொடுத்திருக்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் இந்த வீட்டை விட்டு நீங்கள் வெளியேற்றப்படலாம்.. என்ற சூழல் இருக்கும்பொழுது எதற்காக உங்கள் உடமைகளை பத்திரமாக ஒரு இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..?

அப்படி என்றால் நீங்கள் விளையாட்டில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இல்லை பாதுகாப்பாக விளையாட வேண்டும் இந்த வீட்டில் எப்படியாவது 100 நாட்கள் தாக்கு பிடித்து தங்க வேண்டும் என்ற நம்பிக்கை தான் நீங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால் பிக் பாஸ் என்பது உங்களுடைய உண்மையான முகத்தையும் உங்களுடைய கருத்துக்களையும் வெளிப்படையாக பதிவு செய்ய கூடிய ஒரு தளம். அந்த முயற்சியில் நீங்கள் எந்த வாரம் வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம்.

இடையிலே கூட நீங்கள் வெளியேற்றப்படலாம். அப்படி இருக்கும் பொழுது என்னுடைய பொருள் இங்கே இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என ஒரு இடத்தை நீங்கள் தேர்வு செய்யும் போது தெரிகிறது நீங்கள் அபரிவிதமான நம்பிக்கையில் இருக்கிறீர்கள் விளையாட்டில் உங்களுடைய கவனம் இல்லை என்று.. இனிமேல் அப்படியான நம்பிக்கைகள் ஓவர் கான்ஃபிடன்ட் இதெல்லாம் விட்டுவிட்டு விளையாட தொடங்குங்கள் என்று விளாசியுள்ளார் விஜய் சேதுபதி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version