ஓவரா பண்றாரு விஜய் சேதுபதி.. வாயை திறந்த அர்ச்சனா.. இது என்ன புது பிரச்சனை?.

பிக் பாஸ் நிகழ்ச்சியானது துவங்கிய முதல் ஒரு வாரத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதுமே அதில் நடக்கும் சண்டைகளை வைத்துதான் அதிக வரவேற்பு என்பது இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும்.

ஆனால் முதல் வாரம் துவங்கிய பொழுது பெரிதாக போட்டியாளர்களுக்குள் சண்டை என்பதே இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இது பலருக்குமே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.

ஓவரா பண்றாரு விஜய் சேதுபதி

மேலும் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பதும் ஒரு பக்கம் பலருக்கும் பிடிக்காத விஷயமாக இருந்தது. ஏனெனில் இவ்வளவு நாள் கமல் சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார்.

அவர் அளவிற்கு விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா என்பது ஒரு பக்கம் கேள்வியாக இருந்தது. ஆனால் முதல் நாளில் இருந்தே விஜய் சேதுபதி மிகவும் கவனமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கையாண்டு வருகிறார்.

வாயை திறந்த அர்ச்சனா

அதே சமயம் அவர்கள் செய்யும் தவறுகளுக்கும் சரியான பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் போட்டியாளராக இருக்கும் அருண் பிரசாத் மீது விஜய் சேதுபதிக்கு வன்மம் இருந்து வருவதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது.

அருண் பிரசாத் பாரதி கண்ணம்மா மாதிரியான சீரியல்களில் நடித்ததன் மூலமாக பிரபலம் அடைந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே விஜய் சேதுபதி மட்டுமன்றி அதில் இருக்கும் போட்டியாளர்களுமே தொடர்ந்து அருண் பிரசாத்தை கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது என்ன புது பிரச்சனை

இந்த நிலையில் அருண் பிரசாத்திற்கு ஆதரவாக பேசியிருக்கிறார் விஜே அர்ச்சனா. ரசிகர்கள் பலரும் அருண்பிரசாத்துக்கு ஆதரவாக பேசி வரும் பொழுது அதில் ஒரு ரசிகர் இந்த அருணுக்கு கொஞ்சம் சரியாக பேச வராதே தவிர நல்ல மனம் படைத்தவர் என்று கூறியிருந்தார்.

அதனை எடுத்து மறு பதிவு செய்திருக்கிறார் அர்ச்சனா. இந்த நிலையில் ஒரு நபரை மட்டும் டார்கெட் செய்து பேசுவதை விஜய் சேதுபதி திருத்தி கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் பேச்சாக இருந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version