இதுலக்கூட காபியா..! பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனிச்சீங்களா.. ஆரம்பமே இப்படி இருக்கே?

தமிழக அளவில் மட்டுமன்றி உலக அளவில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் துவங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஜனவரி வரை நடக்கும்.

இந்த காலகட்டங்களில் பெரும்பாலும் மக்கள் மத்தியில் பேசப்படும் விஷயமாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கும். பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகவும் மற்ற தொடர்களையும் நிகழ்ச்சிகளையும் விஜய் டிவி ஆடியன்ஸ் தான் பார்த்து வருவார்கள்.

இதுலக்கூட காபியா

ஆனால் பிக் பாஸை பொறுத்த வரை அனைத்து ஆடியன்ஸும் பார்த்து வரும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதால் பிக் பாஸ்க்கு வரவேற்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் பிக் பாஸிற்கு தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கிறது விஜய் டிவி குழு.

இந்த நிலையில் வருடா வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த ஏழு வருடங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன்தான் தொகுத்து வழங்கி வந்தார். ஏனெனில் ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கிய பொழுது கமலுக்கு அதிகமாக சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

பிக்பாஸ் ப்ரோமோ

அதனால் அவர் பிக்பாஸில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக இருந்து வந்தார். ஆனால் இப்பொழுது மீண்டும் அதிக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் கமல்ஹாசன். மேலும் படிப்பு தொடர்பாக தற்சமயம் அவர் அமெரிக்கா சென்றிருக்கிறார்.

அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்சமயம் பிரபல நடிகரான விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். மூன்று மாதங்களும் இவர்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

ஆரம்பமே இப்படி இருக்கே

இந்த நேரத்தில் தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது இந்த புரோமோவில் விஜய் சேதுபதி வரும்பொழுது முழுவதுமாக சேவ் செய்து கொண்டு வந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கமல்ஹாசனும் இப்படி தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் பொழுது ஷேவ் செய்து கொண்டு வருவார்.

அதையே விஜய் சேதுபதியும் பின்பற்றி இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர். எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் பிம்பத்தை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு விஜய் சேதுபதி தொடர்ந்து புதிதாக ஏதாவது செய்ய வேண்டி இருக்கும் என்று கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam