கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன்… பிக்பாஸ் விதிமுறையை மீறிய விஜய் சேதுபதி.. அதான் அவர் கேரக்டர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த முறை கொஞ்சம் மாற்றமாக சென்று கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும். வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஏழு வருடங்களாக தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் பாணி என்பதே தனிப்பட்டதாக இருக்கும். ஒவ்வொரு போட்டியாளரையும் சனி ஞாயிறுகளில் கமலஹாசன் கையாளும் விதமே சிறப்பானதாக இருக்கும். அதை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் எப்பொழுதும் வார இறுதி வரை காத்துக் கொண்டிருப்பார்கள்.

நீதி தவறி நடக்க மாட்டேன்

ஏதாவது ஒரு போட்டியாளர் பெரிதாக தவறு செய்து விட்டால் ஆண்டவரிடம் கண்டிப்பாக இவர்கள் மாட்டிக்கொள்வார்கள் என்று கமலை குறிப்பிட்டு அதற்காக காத்திருப்பார்கள். ரசிகர்கள் மத்தியில் அப்படியெல்லாம் எதிர்பார்ப்பை கமல்ஹாசன் தூண்டியிருக்கும் பொழுது விஜய் சேதுபதி அப்படியொரு எதிர்பார்ப்பை நிறைவு செய்வாரா என்கிற கேள்வி இருந்து வந்தது.

விஜய்சேதுபதியின் அணுகுமுறை என்பது கமல்ஹாசனிடம் இருந்து வித்தியாசமாக இருக்கிறது. இருந்தாலும் கூட தனிப்பட்ட ஒரு தொகுப்பாளராக விஜய் சேதுபதி தன்னுடைய புது ஸ்டைலைதான் மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டும் என்கிற நிலை இருக்கிறது.

விதிமுறையை மீறிய விஜய் சேதுபதி

அதனால் விஜய் சேதுபதி அவர் போக்கிலேயே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கட்டும் என்கின்றனர் விஜய் சேதுபதி ரசிகர்கள். ஆரம்பத்தில் இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு உறுத்தலாக இருந்தாலும் போகப்போக பிடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு நடுவே விஜய் டிவியே கூறினாலும் கூட சில விஷயங்களை செய்ய மாட்டேன் என்று விஜய் சேதுபதி திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அது என்னவென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிறைய நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்வதை பார்த்திருப்போம்.

அதான் அவர் கேரக்டர்

அந்த ஸ்பான்சர்களின் பெயர்களை எல்லாம் கூறிவிட்டு தான் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். ஆனால் இந்த முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பொழுது ஒரே ஒரு ஸ்பான்சர் நிறுவனத்தின் பெயரை மட்டும் தான் குறிப்பிடுகிறார்.

மற்ற நிறுவனங்களின் பெயரை குறிப்பிடவில்லை. இதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களில் ஆன்லைன் ரம்மி நிறுவனம் ஒன்றும் இருக்கிறது.

அந்த நிறுவனத்தின் பெயரை விஜய் சேதுபதி கூறினால் அது அவரது சொந்த கருத்துக்கு எதிரானதாக இருக்கும் என்பதால் விஜய் சேதுபதி அதை கூற மறுத்துவிட்டார். எனவே ஒரு ஸ்பான்சர் மட்டும் விட்டுவிட்டு மற்ற ஸ்பான்சர்களை கூறினால் அது நிகழ்ச்சியில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் முக்கிய ஸ்பான்சர் ஒருவரின் பெயரை மட்டும் கூறுமாறு விஜய் சேதுபதிக்கு கூறி இருக்கின்றனர். அதனால்தான் அவர் அனைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் ஒரே ஒரு ஸ்பான்சர் பெயரை கூறுகிறார் என்று கூறப்படுகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam