கேம் ஆட சொன்னா என்னடா பண்ணீட்டு இருக்கீங்க.. வெளிப்படையா வச்சி செஞ்ச விஜய் சேதுபதி..!

தற்சமயம் தமிழில் பிக் பாஸ் துவங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் ஒரு வாரத்தை ஏற்கனவே கடந்திருக்கிறது. இந்த முறை போட்டியில் நிறைய விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

முக்கியமாக ஆண் போட்டியாளர்கள் தனியாகவும் பெண் போட்டியாளர்கள் தனியாகவும் விளையாட வேண்டும் என்கிற விதிமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து ஆண் போட்டியாளர்கள் மிக ஜாலியாகவும் பெண் போட்டியாளர்கள் அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டும் விளையாண்டு கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

என்னடா பண்ணீட்டு இருக்கீங்க

பெரும்பாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் அதில் அதிகமாக சண்டைகள் நடப்பது வழக்கமாக இருக்கும். ஆனால் இந்த முறை பெரிதாக சண்டைகளை நடக்கவில்லை ரஞ்சித்துக்கும் ரவீந்தருக்கும் இடையே சண்டை நடந்ததை பார்க்க முடிந்தது.

அதுவும் மேக் கூட கடைசியில் கிண்டலுக்காக செய்தது என்று கூறிவிட்டனர். இந்த அளவிற்கு ஒற்றுமையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விளையாடுவது என்பது அந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்றாது.

மேலும் இது ஆடியன்ஸுக்கும் பொழுது போக்காக இருக்காது எனவே இவர்களுக்குள் சண்டை வர வேண்டும் என்பதற்காகவே அடுத்த கட்ட டாஸ்க் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து விஜய் சேதுபதி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

வச்சி செஞ்ச விஜய் சேதுபதி

வழக்கமாக சனி ஞாயிறுகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கடந்த ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசி வருவார். அந்த வகையில் இன்று இது குறித்து பேசிய விஜய் சேதுபதி கூறும் பொழுது கேம் விளையாடுங்கள் என்று பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தால் உப்பு ஏன் கொடுக்கல, கொத்தமல்லி கட்டை யார் எடுத்தது என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் அவர்கள் சண்டைக்கு முதலில் சுமூகமான ஒரு வழியை காண்போம் என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதாவது இவர்களுக்குள் பெரிதாக சண்டை ஏற்படவில்லை என்பதை தான் மறைமுகமாக இப்படி குறிக்கிறார் விஜய் சேதுபதி என கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version