பிக்பாஸ் கமல்ஹாசனை தாக்கிய விஜய் சேதுபதி..? என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு..!

பிக்பாஸ் 8-வது சீசன் தொடங்கி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. வழக்கம்போல பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் இந்த பிக்பாஸ் சீசனையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முன்னதாக கடந்த ஏழு சீசன்களை தொகுத்து வழங்கிய கமலஹாசன் இந்த சீசனில் இருந்து விடை பெற்றார். அந்த நேரத்தில், இவர் தான் அடுத்த தொகுப்பாளர் என்று பல்வேறு நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன.

ஆனால், கடைசியாக நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் தொகுப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். அந்த நேரத்தில் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு விஜய் சேதுபதியால் முடியுமா..? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

கமலஹாசன் உயரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதியால் ஈடு கொடுக்க முடியுமா..? என்றெல்லாம் பலரும் கேள்விகள் எழுப்பினார்கள். ஆனால் சீசன் தொடங்கிய முதல் நாளிலேயே நடிகர் விஜய் சேதுபதி தன்னை பற்றி கேலி கிண்டல் செய்த நபர்களை வாயடைக்க செய்தார்.

தொடர்ந்து வார இறுதி நாட்களில் படு பயங்கரமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் விஜய் சேதுபதி போட்டியாளர்களுடன் பேசும்போது கமல்ஹாசன் இடத்தை தம்மால் நிரப்ப முடியாது என்று சொன்னவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக ஒரு விஷயத்தை பதிவு செய்தார்.

இதனை பலரும் கமல்ஹாசனை விஜய் சேதுபதி தாக்கியிருக்கிறார் என்றெல்லாம் கூட கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அப்படி என்ன கூறினார் விஜய் சேதுபதி..? என்றால்.. போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இந்த சீசனில் போட்டியாளராக வந்துள்ள நீங்கள் எல்லோருமே ஒரு பாதுகாப்பான விளையாட்டு விளையாடுவதாக நினைத்துக்கொண்டு சுத்தமாக சுவாரசியமே இல்லாத ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

பிக்பாஸ் என்றால் சுவாரஸ்யம். உங்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்களை நீங்கள் எப்படி திறம்பட கையாளுகிறீர்கள்..? எப்படி அதில் நீங்கள் ஜெயிக்கிறீர்கள்..? என்பதுதான் விஷயம்.

ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது என்றால் அது பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாகவும்.. அதை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்.. என்பதை சோதிக்கும் விதமாகவும் தான் இருக்கிறது.

ஆனால், எந்த டாஸ்க் கொடுத்தாலும் போட்டியாளர்கள் போட்டி போடாமல் ஒருவருடன் ஒருவர் சமரசம் செய்து கொண்டு.. எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறீர்கள்.

எல்லோரும், ஏதோ பிக்னிக் வந்தது போலவும்.. ஏதோ சுற்றுலா வந்தது போலவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.. இது நல்ல பழக்கம் தான். ஆனால், பிக் பாஸ் என்பது அதற்கான தளம் கிடையாது.

இந்த பிக்பாஸ் தளத்தில் இந்த பிக்பாஸ் வீட்டில் எப்படி இருக்க வேண்டுமோ..? இங்கு என்ன சொல்லப்படுகிறதோ.. அதை நீங்கள் செய்தால் தான் பார்ப்பதற்கும் சுவாரசியமாக இருக்கும். நிகழ்ச்சியும் ஒரு விறுவிறுப்பாக இருக்கும்.

ஆனால் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சமாதானமாக செல்லும்போது அங்கே சுவாரசியம் உருவாக்குவதற்கு ஒன்றுமே இருக்காது..? ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது என்றால் அதனை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டு அதில் நீங்கள் ஜெயிக்க வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட வேண்டும்.

அந்த போட்டியாளர்கள் எதாவது நினைத்துக் கொள்வார்களோ..? வெளியில் இருப்பவர்கள் ஏதாவது நினைப்பார்களோ..? என்று நீங்கள் தயங்க கூடாது என பேசிய விஜய் சேதுபதி அடுத்த நொடியே சாட்டையை சுழற்றினார்.

அவர் கூறியதாவது ,இங்கே போட்டியாளர்களை சுற்றி தான் பிக்பாஸ் நிகழ்ச்சியே தவிர இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடியவர்கள் கிடையாது. இதன் மூலம் தொகுப்பாளராக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

போட்டியாளர்கள் மட்டும்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படை.. தொகுப்பாளருக்கு இங்கே முக்கியத்துவம் கிடையாது.. என்பதை வலுவாக பதிவு செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இதன் மூலம் தொகுப்பாளராக கமலஹாசன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று பேசியவர்களின் வாயை தொகுப்பாளர் யார் என்பது இங்கே விஷயமே கிடையாது என கூறி அடைத்து இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version