பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வார எலிமினேஷனில் ஆண் போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த வாரமும் ஆண் போட்டியாளர் தான் வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து இந்த வாரமும் ஆண் போட்டியாளர் வெளியேற்றப்பட இருக்கிறார்.
இந்த வாரம் வெளியேறவுள்ள போட்டியாளர் பெயரை அறிந்து கொண்ட ரசிகர்கள்.. என்ன இது கொடுமையா இருக்கு..? என்று தங்களுடைய வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக இந்த வார எலிமினேஷன் நடைபெற்று இருக்கிறது. கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டுவாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த சீசன் முழுதும் ஆண் போட்டியாளர்கள் vs பெண் போட்டியாளர்கள் என்று இருக்கும் எனவும் பிக்பாஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஏழு சீசன்களாக பொதுவாகவே அனைத்து டாஸ்க்களும் கொடுக்கப்பட்டன.
ஆனால், தற்போது ஆண்கள் குழு vs பெண்கள் குழு என தனித்தனியாக பிரித்து கொடுக்கப்படுகிறது என்று கூறலாம். இந்நிலையில், இந்த வாரம் போட்டியாளர் அர்ணவ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக போட்டியாளர் அர்ணவ்வின் மனைவி திவ்யா ஸ்ரீதர் இந்த போட்டியில் போட்டியாளராக பங்கேற்க இருக்கிறார் என்று பிக்பாஸ் எட்டாவது சீசனில் நுழய இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
சக நடிகையான திவ்யா ஸ்ரீதரை காதலித்து அவரை மதம் மாற்றி கையில் ஒரு பெண் குழந்தையும் கொடுத்துவிட்டு நடுரோட்டில் அம்போ என விட்டு சென்றவர் அர்ணவ் என்றும் வேறு ஒரு நடிகையுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக இவர் திவ்யா ஸ்ரீதரை பிரிந்து விட்டார் என்பது இவர் மனைவி திவ்யா ஸ்ரீதர் வைக்கக்கூடிய குற்றச்சாட்டு.
ஆனால், தற்போது சொகுசாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ளே நுழைந்திருக்கிறார் அர்ணவ். அவர் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நடிகையும் இதே பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக இருக்கிறார்.
இந்நிலையில், அவருடைய மனைவியும் போட்டியாளராக உள்ளே வந்தால் போட்டி வேறலெவலில் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக இந்த வாரம் அர்ணவ் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்ற வெளியாகி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.