Site icon Tamizhakam

இந்த வாரம் எலிமினேஷன் இவர் தான்..! எதிர்பாராத முடிவால்.. பிக்பாஸ் ரசிகர்கள் ஷாக்..!

பிக்பாஸ் எட்டாவது சீசன் நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்னுமே இந்த பிக் பாஸ் வீட்டில் விறுவிறுப்பு அதிகரிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் பெண் போட்டியாளர்கள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர பிக் பாஸ் கொடுத்த டாஸ்கை கவனித்ததாக தெரியவில்லை.

ஆனால், ஆண் போட்டியாளர்கள் தங்களுடைய விளையாட்டில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்ல போவது தயாரிப்பாளர் ரவிந்தர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே சில உடல் நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த ரவீந்தர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் அளவுக்கு சென்றார். மருத்துவரின் அறிவுரைப்படி அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் அவருக்கான சிகிச்சை தேவைப்படுகிறது என்றெல்லாம் மருத்துவர்கள் கூறியதன் பேரில் ரவீந்தரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப பிக்பாஸ் முடிவு செய்தது.

ஆனால், எனக்கு அவ்வப்போது மருத்துவ உதவி செய்தால் போதும் பிக் பாஸ் போட்டியில் தொடர்ந்து விளையாடுவதற்கு உண்டான வில் பவர் என்னிடம் இருக்கிறது. நான் நிச்சயமாக இந்த போட்டியை விளையாடுவேன் என கூறி வந்தார் ரவீந்தர்.

அதே நேரம், உடல் உறுதியை சோதிக்கும் விதமான பல்வேறு டாஸ்க்குகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அப்படியான நேரங்களில் ரவீந்தர் சிரமப்படுவார். அவரை பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று ரசிகர்கள் வளரும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனாலும் பிக் பாஸ் வீட்டில் சுவாரசியமாக விளையாடக்கூடிய ஒரு நபர்களில் ரவீந்திரம் ஒருவர்.

நிச்சயமாக இவர் வெளியேற்றப்பட மாட்டார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக அவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை ஷாக் ஆக்கியிருக்கிறது

Exit mobile version