“அப்பாடா.. மனசுல இருந்த பாரமே குறைஞ்சிடுச்சு..” விஜய் சேதுபதி சவுக்கடி பேச்சு.. மிரண்ட போட்டியாளர்கள்..!

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் வார இறுதி நாள் ஆன இன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுகிறார் அது Fatman ரவிந்தர் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு பக்கம் இருக்க முதல் நாளே வெளியேற்றப்பட்டு கடைசியாக மீண்டும் உள்ளே வந்த சாச்சனா செய்த சில நடவடிக்கைகளால் ரசிகர்கள் முகம் சுளித்தனர். இதனை கண்டிப்பாக விஜய் சேதுபதி சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பு வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி சாச்சனாவை ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார். அதாவது, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட முதல் நாளிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்து வந்த சாச்சனா மீண்டும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வந்த பிறகு போட்டியாளர்கள் குறித்து பொதுவான மனநிலை என்ன இருக்கிறது..? மக்கள் மத்தியில் என்ன பேச்சு இருக்கிறது..? ஒவ்வொரு போட்டியாரும் எப்படி நடந்து கொள்கிறார்கள்..? என்றெல்லாம் பேசினார்.

குறிப்பாக ஆண் போட்டியாளர்களிடம் நேரடியாக யார் யார் சரியான முறையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியே தெரியவில்லை.. யார் யார் இன்னும் தங்களுடைய விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.

ஆனால் பெண்களிடம் சென்று நேரடியாக அவர்களைப் பற்றிய கருத்து வெளியில் எப்படி இருக்கிறது என்று கூறவே இல்லை. ஆனால், ஆண் போட்டியாளர்களிடம் சில பெண் போட்டியாளர்கள் மீது மக்களுக்கு அதிர்ச்சி இருப்பதாக கூறியிருந்தார்.

அன்ஷிதா, சௌந்தர்யா, சுனிதா ஆகிய மூன்று பேர் இந்த போட்டியில் சரியாக விளையாடவில்லை வெளியில் தெரியவில்லை அவர்களுடைய எண்ணம் சரியில்லை என்று ஆண் போட்டியாளர்களிடம் கூறினாரே.. தவிர அதனை சம்பந்தப்பட்ட பெண் போட்டியாளர்களிடம் வந்து கூறவே இல்லை..

அதற்கு மாறாக பெண் போட்டியாளர்கள் ஒற்றுமையாக இல்லை அவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் போன்ற பொதுவான கருத்துக்களை மட்டுமே கூறினார். இதனால் ரசிகர்கள் கடுப்பாக இருந்தனர்.

ஆண் போட்டியாளர்களிடம் மட்டும் அவர்களைப் பற்றி நேரடியாக சொல்லிவிட்டு பெண் போட்டியாளர்கள் பற்றி சாதுர்யமாக தவிர்த்து இருக்கிறார். அவர்களை பற்றி வெளியே என்ன நினைக்கிறார்கள்..? என்று கூறினால் அவர்கள் உஷாராகி விடுவார்கள். தனக்கு போட்டியாகி விடுவார்கள் என்று நினைத்ததை தவிர்த்து இருக்கலாம்.

ஆனால் சாச்சனா செய்தது தவறு. இதனை விஜய் சேதுபதி கண்டிப்பாக சுட்டிக்காட்டி பேச வேண்டும் என்று எதிர்பார்த்துனர். அவர்கள் எதிர்பார்த்தார் போலவே சாச்சனாவை பிடித்து விளாசி இருக்கிறார் விஜய் சேதுபதி.

குறிப்பிட்ட மூன்று பெண் போட்டியாளர்கள் சரி கிடையாது என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால், அந்த பெண் போட்டியாளர்களிடம் நீங்கள் கூறினீர்களா..? என்று சாச்சனாவிடாம கேள்வி எழுப்பினார். இதனை கேட்ட சாச்சனா,  இல்லை என்று பதில் அளித்தார்.

ஆனால் ரவீந்திரிடம் அந்த மூன்று பெண் போட்டியாவது குறித்து கூறியிருக்கிறீர்களே.. இது எந்த வகையில் நியாயம்..? என சாச்சனாவை கேட்க திருதிருவென முழிக்கிறார் சாச்சனா.

இதனை தொடர்ந்து சாச்சனா சுட்டிக்காட்டிய மூன்று பெண் போட்டியாளர்களிடமும் சாச்சனாவின் இந்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய சுனிதா எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. யூனிட்டியு.. மண்ணாங்கட்டி.. என்று பேசிவிட்டு இப்படி எங்களை பற்றி வெளியே நினைகிறார்கள் என்பதை பூசி மொழுகிவிட்டார் சாச்சனா என்று அவரும் தன்னுடைய பங்குக்கு எகிறினார்.

இந்த ப்ரோமோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version