பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் விஜய் சேதுபதி என்றதும் பலரும் தங்களுடைய சந்தேகங்களை எழுப்பினார்கள். இது ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சி.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனே ஒரு கட்டத்தில் சொதப்பினாலும் அவரையும் கடுமையாக ரசிகர்கள் விமர்சிப்பார்கள். இப்படி ஒரு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி போய் மாட்டிக் கொண்டார் என்று தான் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
ஆனால், முதல் நாள் முதல் எபிசோடை பார்த்ததுமே விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தகுதியான நபர்தான் என்ற ஒரு கருத்துக்கு வந்திருக்கிறார்கள். அடுத்தடுத்த எபிசோடுகள் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இன்று, முதல் நாள் நடிகர் விஜய் சேதுபதி சம்பவம் செய்திருக்கிறார் என்று அடித்து கூறலாம். ஏனென்றால், எந்த போட்டியாளிடமும் அசடு வழியாமல் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு இதுதான் விஷயம் என ஒரு மூன்றாம் நபராகவே நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய நடவடிக்கைகளை தொடர்கிறார்.
தன்னை புகழ்ந்து பேசினாலும் அந்த புகழ்ச்சிக்கு எந்த ஒரு தெளிவு சுழிவும் காட்டாமல் தன்னுடைய வேலையில் அதி தீவிரமாக இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. அனைத்து போட்டியாளர்களையும் நான் எப்படிப்பட்ட ஆள் என்பதை ஒரு ட்ரெய்லர் போல பயத்தை காட்டிய உள்ளே அனுப்பி இருக்கிறார்.
சக போட்டியாளர்கள் விஜய் சேதுபதியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்நேரம் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
குறிப்பாக நடிகர் ரஞ்சித் அறிமுகத்தின் போது அவருடன் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார் நடிகர் விஜய் சேதுபதி. அப்போது கோவையில் இருந்து தன்னுடைய நண்பர் வந்து இருக்கிறார் என்று கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவரை காட்டினார் ரஞ்சித்.
அப்போது அந்த நண்பர் நடிகர் விஜய் சேதுபதியை பார்த்து வணக்கம் சார்.. சாப்டீங்களா..? என்று கேட்டார். அதற்கு விஜய் சேதுபதி சாப்பிட்டு விட்டேன் என்று கூறினார். உடனே ரஞ்சித்தின் நண்பர் வழக்கமாக நாங்கள் பேச ஆரம்பித்த உடன் இதைக் கேட்டு விடுவோம் என கூறவே.. உடனே நடிகர் விஜய் சேதுபதி இது எல்லோரும் கேட்பார்கள். எல்லா ஊரிலும் கேட்பார்கள். எங்கள் ஊரில் வந்தால் சாப்பிடாமல் வெளியே போங்கள் என்று கூறுவோமா என்ன..? அப்படி எல்லாம் கிடையாது.
எல்லா ஊரிலும் இருக்கக்கூடிய வழக்கம்தான். நாங்கள் அப்படி பண்ணுவோம் என்று சொல்லும் பொழுது மற்றவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என்ற ஆகிவிடாது என்று மூக்குடைத்தார் நடிகர் விஜய் சேதுபதி.
தொடர்ந்து பேசிய அவர் நான் சாப்பிடுவது இருக்கட்டும். உங்கள் நண்பர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல போகிறார். அவருக்கு ஏதாவது சொல்லி அனுப்புங்கள் என்று கூறினார் .இ
ப்படித்தான் ஒவ்வொரு போட்டியாளரையும் வெட்டு ஒன்னு தொண்டு ரெண்டு என பேசி தன்னுடைய வேலையை முடிக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இதை பார்த்த ரசிகர்கள் இதுவே ஆண்டவராக இருந்திருந்தால்.. கோவையில் இருந்து வந்த நடிகர் ரஞ்சித்தின் நண்பர் அப்படி கூறியதும்.. இதுதான் கோவையின் குணம்.. எத்தனையோ பேர் பேசுனாங்க.. யாரவது நான் சாப்பிட்டேனா என கேட்டார்களா..?
இதனை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டும் நானும் கற்றுக்கொள்ள வேண்டும் நாம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஓட்டு கேட்டு இருந்திருப்பார் என பங்கம் செய்து வருகின்றனர்.
Semma kalaai 😂😂😂
Vazhakkam dhaane saar adhu. Enga oorlayum kepaanga. Modhalla indha tharperumaiya vittu tholaingada countempalayam guys 😂#VijaySethupathi #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil8 #BiggBossTamilSeason8pic.twitter.com/54yawP8p7c
— Vikram S Buddhanesan 𝕏 (@vikram_dentist) October 6, 2024