பிக்பாஸ் 8 : RJ ஆனந்தி கேட்ட நச் கேள்வி..! 10 ஆண்டு ரகசியம் உடைத்து.. தழுதழுத்த VJS.. என்ன மனுஷன்யா..!

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி நேற்றே கோலாகலமாக தொடங்கியது ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகம் செய்து வைத்த விஜய் சேதுபதி பிரபல ரேடியோ ஜாக்கி ஆர் ஜே ஆனந்தியை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது ஆர் ஜே ஆனந்தி விஜய் சேதுபதியிடம் ஒரு கேள்வி எழுப்பினார். நம் வாழ்க்கையில் நெகட்டிவிட்டியை எப்படி கையாள்வது. எதிர்மறையான மனிதர்களை எப்படி நாம் புரிந்து கொள்வது என்ற கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, அதாவது.. என் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தை உதாரணமாக கூறுகிறேன்.

சினிமாவில் என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார்.. அவரை கடந்த பத்து வருடமாக நான் தவறாக புரிந்து கொண்டிருந்தேன். அவரும் 10 வருடமாக என்னை தவறாக புரிந்து கொண்டிருந்தார்.

எங்கேயாவது எதேர்ச்சியாக சந்தித்தோம் என்றால்.. நல்லா இருக்கீங்களா..? எப்படி இருக்கீங்க..? என்று கடமைக்காக பேசிவிட்டு கடந்து சென்று விடுவேன். இவ்வளவுதான் எனக்கும் அந்த நண்பருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த தொடர்பு.

ஆனால் சமீபத்தில் அவருடன் மனம் விட்டு பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்படி பேசியபோதுதான் அவர் பற்றி நான் புரிந்து வைத்துள்ள விஷயங்கள் பொய்யானது என்று எனக்கு புரிந்தது. அதேபோல என்னைப் பற்றி அவர் புரிந்து வைத்துள்ள அறிந்து வைத்துள்ள விஷயங்கள் பொய்யானது என அவருக்கு புரிந்தது.

இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நம்மைப் பற்றி யார் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும். அவர்களிடம் சென்று தழுதழுத்த குரலில் நான் இப்படி இல்லை.. என்னுடைய கேரக்டர் இது கிடையாது.. நான் ரொம்ப நல்லவன்.. என்று யாரிடமும் நாம் புரிய வைக்க தேவையில்லை.

அதேபோல இன்னொருவர் பற்றியும் நாம் அவரை இப்படித்தான் இவர் இப்படித்தான் என்று நாம் புரிந்து கொள்ள அவசியமே கிடையாது. எங்கள் இருவருக்கும் வெளிப்படையாக பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது. அதனால் பேசி புரிந்து கொண்டோம்.

ஆனால் ஒவ்வொருவரிடமும் நான் இப்படித்தான் நான் இப்படித்தான் என்று சென்று என்னால் புரிய வைத்துக் கொண்டிருக்க முடியுமா..? அப்படி என்னைப் பற்றி தவறாக நினைத்தால் நினைத்துக் கொள்ளுங்கள்.. எனக்கு வேறு வேலை இருக்கிறது.

உங்களுக்கு நான் அப்படி கிடையாது என்பதை உணர்த்துவது என்னுடைய வேலை கிடையாது. அப்படி நினைத்துக் கொண்டு நம்முடைய அடுத்தடுத்த வேலைகளில் கவனத்தை செலுத்தி கொண்டு நகர்ந்து கொண்டே இருக்க வேண்டுமே தவிர நெகட்டிவிட்டியை ஹேண்டில் பண்றேன் என்ற பெயரில் நம்மை நாமே குழப்பிக் கொண்டிருக்கக் கூடாது என நெற்றி போட்டியில் அடித்தார் போல் பேசியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam