ப்பா..! என்ன பொண்ணு டா..! வீட்டுல சொல்லி சுத்தி போட சொல்லுங்க..! – அசர வைக்கும் பிக்பாஸ் ஜனனி..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஜனனி (biggboss janani) மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனால், பிக்பாஸ் ஜனனி என அழைக்கப்படும் இவரது முழுப்பெயர் ஜனனி குணசீலன். இலங்கையை சேர்ந்த டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர், வீடியோ ஜாக்கி. மாடலிங். டிக்டாக் மூலம் மக்கள் மத்தியில் அதிகமாக அறியப்பட்டவர்.கடந்த விஜய் டிவி பிக்பாஸ் தமிழ் சீசன் 6ல், போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்றார். இலங்கை, யாழ்பாணத்தை சேர்ந்த 23 வயது பெண்ணாக, இவரை பார்த்தவுடனே, பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. கியூட்டாக, ஸ்கூல் பொண்ணு போல காட்சி தந்த ஜனனியின், இலங்கைத் தமிழ் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.

இலங்கை ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் உணவு மற்றும் சுகாதார நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், ஸ்டார் தமிழ் தொலைக்காட்சியில் நியூஸ் ரீடர், ஐபிசி தமிழ் யயூடியூப் சேனில் மாலை 5 மணி செய்திகளை தொகுத்து வழங்குவது என, ஜனனி பணி செய்திருக்கிறார்.

biggboss janani

ஜனனி, கேபிடல் டிவி ஸ்ரீலங்காவில் விஜே ஆக இருக்கிறார். இவர் தொகுப்பாளினி லக்சனாவுடன் இணைந்து நடத்திய ‘துக் டிக் டோக்’ நகைச்சுவை நிகழ்ச்சி மேலும் ஜனனியை பிரபலமாக்கியது.
கடந்த 2022ல் ஆடை மற்றும் ஆடை பிராண்ட் கிராபோ 365 க்கு மாடலிங் செய்தார். ஸ்வர்ணாலயா ஜூவல்லரிக்கு விளம்பர மாடலாகவும் ஜனனி நடித்திருக்கிறார்.

சமூக ஊடகத் தளமான ‘டிக்டாக்’ இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு முன்பு, பிரபலமான டிக் டாக்கராக இருந்தவர் ஜனனி, இவருக்கு 1.70 லட்சம் பாலோயர்ஸ் இருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. ஜனனி, அசைவ உணவு பிரியராக உள்ளார். பிக்பாஸ் வீட்டில், அடிக்கடி நான்வெஜ் பிரியராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

biggboss janani

டிவி ஊடகங்கள் தந்த வெளிச்சமும், டிக்டாக் வாயிலாக கிடைத்த புகழும், இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. ஆண்டுதோறும் இலங்கையை சேர்ந்த ஒருவர் கட்டாயம், பிக்பாஸில் இடம்பிடிப்பர். அந்த வகையில், லாஸ்லியா மறக்க முடியாதவராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் நடித்தும் வருகிறார்.அதேபோல், சினிமா ஆசை கொண்ட ஜனனியும், கல்லூரியில் படித்த பிறகு சினிமா வாய்ப்புக்காக முயற்சித்தார். ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிர்ஷ்டம் அமைந்தது.

biggboss janani

ஜனனி, கொஞ்சுகிற மொழியில் பேசும் இலங்கை தமிழுக்காக பலரும், அவரை விரும்பி ரசித்தனர். தவிர, சின்னப் பெண் தோற்றத்தில் அவரது கலகலப்பான, துறுதுறுப்பான நடவடிக்கைகளும் பிக்பாஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால், சில நாட்களுக்கு பிறகு, அவர் அமுதவாணன் மீது காட்டிய அதீத கவனமும், ஈர்ப்பும் அவர் மீதான எதிர்பார்ப்பை மாற்றி விட்டது.

இதனால், பார்வையாளர்கள் மத்தியில் இவருக்கு இருந்த நல்ல அபிமானம் போனது. ஒரு கட்டத்துக்கு பிறகு, அமுதவாணனின் கைப்பாவையாக மாறி, அவர் சொல்வதை கேட்கும் ஒருவராக மாறியதால், தனக்கான சுயத்தை, நிகழ்ச்சியில் இழந்தார். நல்ல கன்டஸ்டன்ட் என்ற பெயரும் பறிபோய், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

biggboss janani

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்வமாக இருக்கும் ஜனனி, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் அப்டேட் செய்த சில புகைப்படங்களில் ஜனனி உடன் பிக்பாஸ் தனலட்சுமி, அமுதவாணன் ஆகியோர் இருந்தனர். இப்போதும், அமுதவாணனுடன், ஜனனி நட்பு தொடர்கிறது. பிக்பாஸ் தந்த புகழ் வெளிச்சத்தில் தமிழ் சினிமா வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருக்கிறார் ஜனனி.

biggboss janani

இப்போது லேட்டஸ்ட் ஆக அவர், பதிவிட்டுள்ள சுடிதார் அணிந்துள்ள இந்த அழகிய புகைப்படங்கள் வைரலாகின்றன. மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு, தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …