“சும்மா அள்ளுதே..” – பிக்பாஸ் 6-வது சீசன் போட்டியாளர்கள் பட்டியல்..! – எகிறிய எதிர்பார்ப்பு..!

பிக்பாஸ் 6 : நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏற்கனவே ஐந்து சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசனின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை பொது மக்களில் இருந்து ஒருவர் கலந்துகொள்ள வெளிப்படையான போட்டியை அறிவித்திருக்கிறது பிக்பாஸ் குழு. கடந்த சீசனில் வெற்றிபெற்ற நடிகர் ராஜு இந்த போட்டியாளர் தேர்வுக்கான விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த விளம்பரங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு இன்னார்தான் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று ஒரு உத்தேசமான பட்டியல் இணையத்தில் வைரலாக வாடிக்கை.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள அவர்கள் கலந்து கொள்கிறார்களோ..? இல்லையோ..? அந்த பட்டியல் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும். காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு தான்.

சில நேரங்களில் இப்படி வெளியாகும் உத்தேச பட்டியல் இருக்கும் பெரும்பான்மையான போட்டியாளர்கள் கலந்து கொள்வதும் உண்டு. அந்த வகையில் பிக்பாஸ் 6 வது சீசனில் கலந்து கொள்ளக்கூடிய முதல் 13 போட்டியாளர்கள் அடங்கிய பட்டியல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ் போட்டி என் மீதான எதிர்பார்ப்பு இதன்மூலம் அதிகரித்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் இணையத்தில் வைரலாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களின் பட்டியல் இதோ,

  1. தொகுப்பாளினி திவ்யதர்ஷினி
  2. தொகுப்பாளர் ரக்சன்
  3. டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து
  4. ஸ்ரீநிதி
  5. மோனிகா (இசையமைப்பாளர் டி இமான் முன்னாள் மனைவி)
  6. கார்த்திக் (பாடகி சித்ராவின் முன்னால் கணவர்)
  7. பாடகி ராஜலட்சுமி
  8. நடிகை தர்ஷா குப்தா
  9. நடிகை ஷில்பா மஞ்சுநாத்
  10. செய்திவாசிப்பாளர் ரஞ்சித்
  11. நடிகை ஆயிஷா (சத்யா சீரியல்)
  12. நடிகை நடிகை ஷாலு ஷம்மு
  13. நடிகை சோனியா அகர்வால்

இந்த பட்டியல் தற்பொழுது பிக்பாஸ் போட்டியாளர்கள் என்று இணையத்தில் வைரலாகி வருகிறது விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு பிக்பாஸில் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …