நயன்தாராவின் மினியேச்சர் நீங்க..! – அனிகாவை கொண்டாடும் ரசிகர்கள்..!

நயன்தாராவின் மினியேச்சர் நீங்க..! - அனிகாவை கொண்டாடும் ரசிகர்கள்..!

 

மலையாள திரைத்துறையை சேர்ந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். கத துடருன்னு என்ற மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அனிகா, தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார்.

 

தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடிம்ததுள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

 

பேபி ஷாலினியில் ஆரம்பித்து மீனா மகள் நைனிகா, தெய்வத்திருமகள் சாரா வரை தமிழ் திரையில் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கின்றனர். அதிலும் சிலருக்கு மட்டுமே எதிர்காலத்தில் ஹீரோயினாக வளரும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும். 

 

ஆனால் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஹீரோயின் அளவிற்கு இடம் பிடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன். அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்த சின்ன வயதிலேயே சினிமா, ஷார்ட் பிலிம்ஸ், மாடலிங் என சகல துறைகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார். சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாடல் தொகுப்பில் அனிகாவின் அசத்தலான நடிப்பு வரவேற்பை பெற்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …