பெண்களுக்கான மாதம் 1000 ரூபாய் திட்டம் எப்போது..? – சத்தியம் செய்து கூறிய முதல்வர்..!

1000 ரூபாய் திட்டம் : ஈரோடு இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் அவர்களை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் பற்றி பேசி இருந்தார் அதில் அவர் குறிப்பிட்டதாவது

கல்லூரி மாணவிகளுக்கு நாங்கள் சொல்லியபடி உதவி தொகையை கொடுத்து வருகிறோம் நீட் தேர்வுக்கு எதிராக மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம் ஆனால் ஆளுநர் ஓ மத்திய அரசோ எந்தவித பதிலும் சொல்லாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர் என்னுடைய ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வை காண விளக்கை பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை

திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக நான் சொல்லவில்லை இருந்தாலும் 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம்…

மீதம் 15 சதவீதத்தை விரைவில் நிறைவேற்றுவோம் அதற்கு ஐந்து ஆண்டுகள் தேவையில்லை இந்த ஆண்டிலேயே நிறைவேற்றுவோம்

கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கூறினார். மேலும் அவர் இதற்கு முன் இருந்த அரசு நிதி நிலைமையை படுமோசமான நிலைமைக்கு கொண்டு போய் விட்டது. இல்லையெனில் அனைத்தையும் வந்த உடனேயே எங்களால் நிறைவேற்றி இருக்க முடியும் இருப்பினும் நிதிநிலைமையை சரி செய்து கொண்டுள்ளோம்.

பெண்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை எப்போது தருவோம் என வரும் மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும் போது சொல்லி விடுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

இதனால் மகளிர்க்கு இன்னும் சில மாதங்களில் மாத மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என திமுகவினர் பரப்புரை செய்து வருகின்றனர். இது நாட்களை தள்ளி போடும் வேலை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்

இதுபோன்ற முக்கியமான அரசியல் செய்திகளை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Summary in English : Chief Minister M.K Stalin recently promises that the Tamil Nadu Budget 2023-24 will include a Rs 1000 scheme targeted at women. This is in line with his commitment to work towards enhancing the welfare of women in the state and providing them with financial support during difficult times.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …