குழந்தை நட்சத்திரமாக நடித்து முன்னணி நடிகையாக மாறியவர்கள்..! – பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!

இன்று நாம் நடிகைகளாக பார்த்துவரும் பல முன்னணி நடிகைகள் சினிமாவில் தன்னுடைய குழந்தைப் பருவம் முதலே நடித்து வருபவர்களில் சிலர் இருக்கிறார்கள். அப்படி சிறுவயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது பிரபல நடிகைகளாக இருக்கும் நடிகைகளின் பட்டியலை நாம் இங்கே பார்க்க போகிறோம்.

மிகவும் சுவாரசியமான இந்த பட்டியல் அவர்களுடைய புகைப்படத்துடன் இங்கே இணைக்கப்பட்டுள்ளது வாருங்கள் பார்க்கலாம்.

சுஜிதா தனுஷ்

தற்பொழுது சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை சுஜிதா தனுஷ் ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இவர் தன்னுடைய பள்ளிப் பருவம் முதலே சினிமா மற்றும் சீரியல் குண்டான தோற்றம் பெற்றதன் மூலம் சீரியல் நடிகை யாக மற்றும் சினிமா நடிகையாக உயர்ந்து இவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி விஜயகுமார்

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியிருக்கிறார். கலை குடும்பத்தை சேர்ந்த இவரது குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் நடித்து வருகிறார்கள்.

என்றாலும் கூட குழந்தை நட்சத்திரமாக இவர்களது குடும்பத்தில் இருந்து நடித்த ஒரே நடிகை நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தான் என்றால் சிறு வயதிலேயே அழகு பதுமையாக இருந்த இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

சனுஷா

கேரளாவை சேர்ந்த நடிகை சனுஷா தமிழில் ரேணிகுண்டா அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகையாக வாய்ப்பு இருக்கிறது என்று அறியப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.

ஆனால் உடல் எடை கூடி குண்டாகி போனதால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்தது. மேலும் பல்வேறு மன நோய்களுக்கு ஆளாகி மீண்டதாக நடிகை சனுஷா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனா

நடிகர் ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாளில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தவர் நடிகை மீனா.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். தற்போது இவருடைய குழந்தையும் சினிமாவில் நடித்து வருகிறது. சமீபத்தில் இவருடைய கணவர் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹன்ஷிகா

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரசித்தமான ஒருவர். காரணம் 90 ஹிட்ஸ் கலை கவர்ந்த ஷக்கலக்க பூம் பூம் என்ற மேஜிக் பென்சில் சீரியலில் கருணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஆனால், தற்போது கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதலரும் தன்னுடைய தோழியின் முன்னாள் கணவருமான ஒருவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நித்யா மேனன்

தமிழில் வெப்பம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நித்யாமேனன் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவரும் தன்னுடைய பள்ளிப் பருவம் முதலே சினிமாவில் நடித்து வருகிறார் மேலும் சில சீரியல்களிலும் கூட நடித்து இருக்கிறார் நடிகை நித்யா மேனன்.

மோனிகா

நடிகர் விஜய்யின் பகவதி திரைப்படத்தில் அவரது தம்பியாக நடித்து இருந்தார் நடிகர் ஜெய்யின் காதலியாக நடித்து இருந்தார் நடிகை மோனிகா. அதன் பிறகு பல படங்களில் ஒரு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பல திரைப்படங்களில் குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகை மோனிகா சிலந்தி என்ற திரைப்படத்தில் படுமோசமான கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

ஒருகட்டத்தில் இஸ்லாமியராக மதம்மாறிய இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையை கவனிக்க சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிவேதா தாமஸ்

90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமான மைடியர் பூதம் என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ். நல்ல குரல்வளம் உடையவர் சூப்பர் சிங்கர் போட்டிகளிலும் கலந்துகொண்டு பிரபலமானார்.

அதன் பிறகே தன்னுடைய அழகால் சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பைப் பெற்ற இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நஸ்ரியா

பள்ளிபருவம் முதலே நன்கு பாடுவதிலும் நடனம் ஆடுவதையும் கை தேர்ந்தவராக இருந்தார் நடிகை நஸ்ரியாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கும் நடிகை நஸ்ரியா ஒரு கட்டத்தில் சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பு பெற்றார். சில படங்களில் நடித்திருந்தாலும் கூட முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற இவர் திடீரென பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதிவ்யா

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை ஸ்ரீதிவ்யா தொடர்ந்து பல படங்களில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

ஒரு கட்டத்தில் அவர் நடித்த படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எடுபடாமல் போகவே சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டார்.

மறுபக்கம் பிரபல அரசியல்வாதி ஒருவரின் பரிசு கொடுத்த தொந்தரவுதான் இவர் சினிமாவை விட்டு விலகுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஷாலினி

நடிகர் அஜித்தின் காதல் மனைவியும் முன்னாள் நடிகையுமான நடிகை ஷாலினி இவருடைய பெயரை பேபி ஷாலினி என்றுதான் பலரும் கூறுவார்கள். குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை ஷாலினி.

மேலும் இவருடைய சிகை அலங்காரத்திற்கு எனவே தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. தங்களுடைய குழந்தைகளுக்கும் பேபி ஷாலினி போல முடி வெட்டி அழகு பார்க்க வேண்டும் என்ற தாய்மார்களே இருக்க முடியாது என்று கூறலாம். அந்த அளவுக்கு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் கலக்கியவர் ஷாலினி என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாமிலி

நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி தமிழில் துர்கா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 90களின் மிகவும் பிடித்தமான ஒரு திரைப்படம் என்று இதனைக் கூறலாம்.

யானை, நாய், குரங்கு உள்ளிட்ட விலங்குகளை நடிக்கவைத்து விட்டலாச்சாரியார் வேலையை காட்டி இருப்பார் இந்த படத்தின் இயக்குனர் ராம நாராயணன். இந்த திரைப்படம் வெளியானபோது பெருவாரியான குழந்தைகளை இந்த படம் கவர்ந்தது.

எனவே அப்போது கோடிக்கணக்கான ரூபாய்களை இந்த படம் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் துர்கா என்ற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தவர் வேறு யாருமல்ல ஷாமிலி தான்.

ஸ்ரியா ஷர்மா

தமிழில் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களில் இவரை அடிக்கடி பார்த்து இருக்க முடியும். சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஜோதிகாவின் குழந்தையாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா சர்மா.

தற்போது சினிமாவில் ஹீரோயினாக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் தன் மீதிருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பம் என்னும் ரசிகர்கள் மத்தியில் அப்படியே இருப்பதால் ஹீரோயினாக இவருடைய முன்னெடுப்பு எடுபடாமல் போய்விட்டது என்று கூறலாம்.

ஆனாலும் தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க படாத பாடுபட்டு வருகிறார் நடிகை ஸ்ரேயா சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய தந்தை ஒரு தயாரிப்பாளர் என்பதால் எளிதாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் இவர் ஒரு கட்டத்தில் படிப்பை கவனிப்பதற்காக சினிமாவிலிருந்து விலகினார்.

அதன் பிறகு ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …