Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

ஆபத்தான மேடு.. இளமையின் சூடு.. தளுக்கு மொழுக்கு என காட்டி சூடேற்றும் தர்ஷா குப்தா..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகளுக்கு கதாநாயகியாவது என்பது பெரும் போராட்டமாக இருந்து வருகிறது. எடுத்த எடுப்பிலேயே சினிமாவில் பெரிய இடத்தை தொடும் அளவிற்கு பிரபலங்களின் பின்புலம் இல்லாத நடிகைகள் எக்கச்சக்கமான கஷ்டங்களை அனுபவித்து சினிமாவிற்கு வருகின்றனர்.

அப்படியாக சின்னத்திரையில் இருந்து போராடி கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் தற்சமயம் கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா. தமிழில் முதன்முதலில் முள்ளும் மலரும் என்கிற ஜீ தமிழ் நாடகத்தில் அறிமுகமானார் தர்ஷா குப்தா.

இளமை காலம் முதலே அவருக்கு திரை துறையில் நல்ல வரவேற்பு பெற வேண்டும் என்பது ஆசையாக இருந்து வந்தது. அதற்கு சீரியல் வழியாக செல்லலாம் என்று நினைத்து சீரியலில் என்ட்ரி ஆனார் தர்ஷா குப்தா.

சீரியலில் வாய்ப்பு:

ஆனால், சீரியல் என்பது எல்லோருக்கும் சினிமாவிற்கு செல்வதற்கு கை கொடுக்காது அதைத்தாண்டி தனித்துவமாக அவர்கள் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டியது இருக்கும். இந்த நிலையில் செந்தூரப்பூவே என்கிற விஜய் டிவி சீரியலில் அவர் நடித்துக் கொண்டிருந்த பொழுதுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றார் தர்ஷா குப்தா.

---- Advertisement ----

குக் வித் கோமாளி ஒரு காமெடி நிகழ்ச்சி என்பதால் அதை விஜய் டிவி ரசிகர்களை தாண்டி பலரும் பார்த்து வந்தனர். மேலும் குக் வித் கோமாளி சீசன் 2 துவங்கிய பொழுதுதான் அதிகமான ரசிகர்கள் அதை பார்க்க துவங்கினர்.

அந்த நிலையில் அதில் குக்காக களமிறங்கினார் தர்ஷா குப்தா.. அது அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இறங்கினார் தர்ஷா குப்தா. இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

திரைத்துறையில் சில படங்கள்:

திரைப்படத்தில் நடித்த பிறகு தொடர்ந்து வாய்ப்புகளை வாங்குவதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தொடர்ந்து ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் தர்ஷா குப்தா நடித்த இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெரும் திரைப்படங்களாக அமையவில்லை. அதேப்போல பெரும் நடிகர்கள் நடித்த எந்த ஒரு திரைப்படத்திலும் தர்ஷாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்சமயம் மெடிக்கல் மிராக்கல் என்கிற திரைப்படத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என்று தெரியவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக புகைப்படங்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா சமீபத்தில் சூரியன் மறையும் நேரத்தில் எடுத்து வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று இருக்கின்றன.

Continue Reading

More in Actress

Trending

To Top