” எப்படிப் படுத்துப் பார்த்தாலும் தூக்கம் வரவில்லையா…! Don’t worry இந்த டிப்ஸை ஃபாலோ செய்தா ஆழ்ந்து உறங்கலாம்..!

இன்றைய காலகட்டத்தில் இருக்கக்கூடிய பணி சுமையின் காரணமாகவும், மன அழுத்தம் காரணமாகவும் தூக்கம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக ஆழ்ந்த உறக்கத்தை  அனுபவிக்க முடியாமல் தள்ளாடி வருகிறார்கள்.

மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாக இருக்கக்கூடிய உறக்கம் சரியாக வரவில்லை என்றால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எனவே ஆழ்ந்த உறக்கத்தை நீங்கள் நிம்மதியாக உறங்க வேண்டும் என்றால் அதுவும் ஆழ்ந்த உறக்கத்தில் எந்த கவலையும் இல்லாமல் உறங்குவதற்கு சில டிப்ஸ் உள்ளது. இதை ஃபாலோ செய்து பாருங்கள். கட்டாயம் உங்களுக்கு உறக்கம் வரும்.

ஆழ்ந்த உறக்கத்திற்கான டிப்ஸ்

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் நீங்கள் எப்போதுமே உறங்க செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவு 9 மணிக்குள் நீங்கள் உறங்கச் செல்வது நல்லது.

அப்போதுதான் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தை பெற்று ஆரோக்கியமாக வாழ முடியும். மேலும் நீங்கள் உறங்கச் செல்வதற்கு முன்பு ஒரு மணி நேரமாவது உங்களது செல்போன்கள் மற்றும் லேப்டாப்புகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

மேலும் உங்கள் படுக்கை அறையை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும் எந்தவித சத்தங்கள் இல்லாமலும் இருக்குமாறு வைத்துக் கொண்டீர்கள் என்றால் நிச்சயமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லலாம்.

 உறங்கச் செல்வதற்கு முன்பு தீய பழக்கங்களான மதுபானம் அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.

 தினமும் உடற்பயிற்சிகளை விரைவாக செய்வதின் மூலம் உறங்குவதற்கு தேவையான நேரம் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் உறங்கப் போவதற்கு முன்பு சில உடற்பயிற்சிகளை நீங்கள் தவிர்ப்பது நல்லது.

 மன அழுத்தம்,பதட்டம் காரணமாக உறக்கம் ஏற்படாது. எனவே உறங்குவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பாக நீங்கள் யோகா தியானம் போன்றவற்றை மேற்கொள்வதின் மூலம் ஆழ்ந்த உறக்கத்திற்கு நீங்கள் செல்லலாம்.

எனவே மேற்கூறிய இந்த டிப்சை ஃபாலோ செய்து பார்த்தால் உறக்கம் உங்களுக்கு கட்டாயம் வரும். அதுவும் ஆழ்ந்த உறக்கம் என்பதால் உங்கள் ஆரோக்கியமும் மேம்பட இது உதவி செய்யும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …

Exit mobile version