மிக விரைவில்… சேத்தன் மற்றும் தேவதர்ஷினி மகள் நியாத்தி கதாநாயகியாக அறிமுகம் – ரசிகர்கள் ஆர்வம்!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகை சரளாவுக்கு பின் தேவதர்ஷினி அந்த இடத்தை பூர்த்தி செய்ய வந்தவர் என்று தமிழ் திரையுலகமே நம்பியது. அதுபோல் அவரது நடிப்பும் இருந்தது. ஆரம்பத்தில் பல சீரியல்களில் நடித்து வந்த இவர் தமிழ் திரையுலகில்  காஞ்சனா படத்தின் மூலம் மக்களது இதயத்தை கொள்ளை கொண்டார் இதில் இவரது நடிப்பு நகைச்சுவை கலந்து அனைவரையும் சிரிக்க வைத்தது.இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 மேலும் இவர் தமிழில் மெர்சல், பிகில், எதற்கும் துணிந்தவன், எந்திரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் சீரியல் நடிகர் சேத்தனுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட காதலால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு நியாத்தி என்ற பெயரில் ஒரு பெண் பிள்ளை உள்ளது.

மேலும் இவர் மர்மதேசம்,சிதம்பர ரகசியம்,ரமணியும் ரமணி 2 ம், அண்ணாமலை, கோலங்கள், பெண், சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, எத்தனை மனிதர்கள், கனவுகள் இலவசம், பெண்மனம், உறவுகள் ஒரு தொடர்கதை, கண்ணாடிக் கதவுகள் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

காஞ்சனா படத்தில் தேவதர்ஷினி நடிப்பை யாராலும் மறக்க முடியாது அந்த அளவுக்கு அவர்களும் இணைந்து காமெடியில் கலக்கிய விதம் இன்றும் பசுமையாக அனைவரது மனதிலும் இருக்கும்.இதற்காக இவருக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளில் ‘காஞ்சனா’ திரைப்படத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நகைச்சுவை நடிகை’ விருது பெறுகிறார்.

 இளம் வயதிலேயே இந்தப்பெண் விஜயசேதுபதியுடன்  96 என்ற படத்தில் சிறு வயதிலேயே ஒரு பள்ளி மாணவியாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

 தற்போது அந்த பெண் ஹீரோயினி அளவுக்கு வளர்ந்து விட்ட நிலையில் இந்த பெண்ணிற்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம்.இந்த படத்திற்கான கதையை இவரது அம்மா தேவதர்ஷினி கேட்டு வருகிறாராம். இதனை அடுத்து விரைவில் தனது பெண்ணை கதாநாயகியாக தமிழ்த் திரை  உலகில் வலம் வருவார் என்று கூறினார்.

நியாத்தியின் அப்பா மற்றும் அம்மா சிறந்த நடிகர்களாக திகழும் போது இந்த பெண்ணிற்கும்  அளவு நடிப்புத்திறன் இருப்பதால் நிச்சயமாக இவர் திரையுலகில் ஜொலிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …