மியூசிக் டைரக்டர் தேவிஸ்ரீபிரசாத்தா இது.. என்ன ஆச்சு உடல்நிலைக்கு.

மியூசிக் டைரக்டர் தேவிஸ்ரீபிரசாத்தா இது.. என்ன ஆச்சு உடல்நிலைக்கு..

தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் தேவிஸ்ரீபிரசாத். சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜூனா, அல்லு அர்ஜூன், மகேஷ்பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த பல ஹிட் படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

தேவிஸ்ரீபிரசாத்

இவரது பெயரை சுருக்கி, டிஎஸ்பி என சினிமா வட்டாரத்தில் அழைப்பது வழக்கம். தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அந்த படத்தின் பாடல்களும் மெகா ஹிட் பாடல்களாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன.

மியூசிக் டைரக்டர் தேவிஸ்ரீபிரசாத்தா இது.. என்ன ஆச்சு உடல்நிலைக்கு.

ஏகப்பட்ட விருதுகள்

இவர் இசையமைப்பாளர் மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர் போன்ற அடையாளங்களையும் கொண்டவர். இது வரை பத்துமுறை பிலிம்பேர் விருதுகளையும் 7 முறை சைமா விருதுகளையும் வென்றிருக்கிறார். அதுதவிர ஒரு தேசிய விருது, ஒரு நந்தி விருதும் என ஏகப்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.

தமிழில் சிங்கம், தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீபிரசாத். இப்போது சூர்யா நடித்து வரும் கங்குவா படத்துக்கும், விஷால் நடித்துள்ள ரத்னம் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஸ்ரீதேவி பிரசாத், அவ்வப்போது தனது வாழ்வில் நடக்கும் முக்கிய விஷயங்கள் குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறார். இப்போதும் அப்படி ஒரு சந்தோஷமான பகிர்வை செய்திருக்கிறார்.

மியூசிக் டைரக்டர் தேவிஸ்ரீபிரசாத்தா இது.. என்ன ஆச்சு உடல்நிலைக்கு.

இசைஞானி இளையராஜா

தேஸ்ரீபிரசாத்துக்கு ஆந்திராவில் ஸ்டுடியோ உள்ளது. அதே போல் சென்னையிலும், தேவிஸ்ரீபிரசாத்துக்கு சொந்தமான ஸ்டுடியோ உள்ளது. அந்த ஸ்டுடியோவுக்கு இசைஞானி இளையராஜா நேரில் சென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஹீரோயின் ஆனார் பிக்பாஸ் மாயா.. ஹீரோ யாருன்னு பாருங்க..

தனது ஸ்டுடியோவுக்கு நேரில் வந்த இசைஞானி இளையராஜாவை வரவேற்று உபசரித்த தேவிஸ்ரீ பிரசாத், நீண்ட நேரம் அவருடன் பேசியுள்ளார். இருவரும் பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். அப்போது இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, எனது நீண்ட கால வாழ்நாள் கனவு நிறைவேறியது என குறிப்பிட்டுள்ளார்.

மியூசிக் டைரக்டர் தேவிஸ்ரீபிரசாத்தா இது.. என்ன ஆச்சு உடல்நிலைக்கு.

வாழ்நாள் கனவாக…

எனது மிகப்பெரிய வாழ்நாள் கனவாக, இசைஞானி இளையராஜா எனது ஸ்டுடியோவுக்கு வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்போது அவரது புகைப்படத்துக்கு அருகில் நின்று, அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

இதையும் படியுங்கள்: ஜோதிகாவின் சொத்து மதிப்பு தெரியுமா..? வாயை பிளந்த ரசிகர்கள்..

நியாயமான ஆசைகள் நிறைவேற இந்த பிரபஞ்சம் எப்போதும் வழிவிடும். அதன்படி கடைசியாக என் ஆசை நிறைவேறியுள்ளது.

மியூசிக் டைரக்டர் தேவிஸ்ரீபிரசாத்தா இது.. என்ன ஆச்சு உடல்நிலைக்கு.

என்ன ஆனது உங்களுக்கு?

ஆனால் அந்த புகைப்படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். அவரது முகத்தோற்றமே வேறுமாதிரி மாறியுள்ளது.

இதுகுறித்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள், நன்றாக உள்ளீர்களா, ஏன் இப்படி இருக்கிறீர்கள், என்ன ஆனது உங்களுக்கு எனக்கேட்டு பதறிப்போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மியூசிக் டைரக்டர் தேவிஸ்ரீபிரசாத்தா இது.. என்ன ஆச்சு உடல்நிலைக்கு.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version