தனுஷின் அடுத்த படத்தில் யாரு ஹீரோயின் என தெரிஞ்சா அல்லு உட்ரும்..!

தனுஷின் அடுத்த படத்தில் யாரு ஹீரோயின் என தெரிஞ்சா அல்லு உட்ரும்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் ஆரம்ப காலகட்டத்தில் தனது அண்ணன் செல்வராகவன் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து தனது அற்புதமான நடிப்பு திறன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேற்றுமையின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சினிமாவில் அதிக அளவு கவனத்தை செலுத்தி வரும், தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் தனது அற்புதமான நடிப்பை உறுதி செய்யக்கூடிய வகையில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தனுஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோயினியாக நடிக்கக்கூடிய நடிகை யார்? என்று தெரிந்தால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்.

மேலும் இந்த படத்தில் தனுஷ் தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருக்கிறார். இந்த செய்தி தான் தற்போது திரை வட்டாரத்தில் பேசும் பொருளாக உள்ளது.

அது சரி அந்த நடிகை யார் என்று நீங்கள் யூகித்து விட்டீர்களா? இவர் இந்திய சினிமாவின் முன்னணி குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தவர். குறிப்பாக இந்த அழகி கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். 

தமிழில் தல அஜித் நடிப்பில் வெளி வந்த விசுவாசம் திரைப்படத்தில் அவருக்கு ரீல் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர்.

மேலும் இவரது அழகை பார்த்து அனைவரும் இவரை குட்டி நயந்தாரா என்று வர்ணித்திருக்கிறார்கள். என்னை அறிந்தால், விசுவாசம் உள்ளிட்ட படங்கள் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை மக்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. 

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் மலையாள திரை உலகிலும் மம்முட்டி, மோகன்லால், ஜெயம் ராம் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். தமிழில் ரசிகர்கள் இருப்பது போலவே மலையாள திரை உலகிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டு வெளிவந்த கப்பேலா என்ற ரீமிக்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். 

இதனை அடுத்து புட்ட பொம்மா என்ற படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றது. மேலும் இவர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் லிப் லாக் காட்சிகளில் நடித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

இப்போது யார் அந்த நடிகை என தெரிந்ததா? நீங்கள் நினைப்பது சரிதான் அஜித்தின் ரீல் மகளான அனிகா சுரேந்தர் தான். இந்த ஹீரோயின் தற்போது தமிழில் தனுஷ் மூலமாக ஹீரோயினியாக அறிமுகம் ஆக இருக்கிறார். இந்த படத்தைக் காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version