உங்க வீட்டில் மீன் தொட்டி இருக்கா? – அப்ப இந்த இடத்தில் வையுங்க..!!

இன்று பெரும்பாலானவர்களின் வீடுகளில் மீன் தொட்டி ஒரு அலங்கார பொருளாக வைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த மீன் தொட்டியை வைப்பதின் மூலம் அதிர்ஷ்டம் அவர்களுக்கு வந்து சேரும் என்ற வாஸ்து நம்பிக்கையின்படி அவர்கள் மீன் தொட்டியை வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட மீன் தொட்டியை அவர்கள் வீட்டில் வைத்து வளர்க்கும் போது அதை சரியான இடத்தில் வைத்து வளர்த்தால் கட்டாயம் அவர்களுக்கு அதிர்ஷ்டம் அளிப்பதோடு பண வரமும் அதிகமாக கிடைக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

மன அழுத்தத்தை குறைக்க கூடிய இந்த மீன் தொட்டியை உங்கள் வீட்டில் நீங்கள் இப்படி வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அது உங்களுக்கு துரதிஷ்டத்தை தரும். அதிர்ஷ்டத்தை தர நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் மீன் தொட்டியை எப்போதும் படுக்கை அறை அல்லது சமையலறையில் வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் உங்களுக்கு பண இழப்பு அதிக அளவு ஏற்படும்.

உங்கள் வீட்டு மீன் தொட்டியை நீங்கள் கிழக்கு, வடக்கு திசைகளில் வைப்பது சாலச் சிறந்தது. முடியாவிட்டால் வட கிழக்கு திசையில் வைக்கலாம். இதன் மூலம் உங்கள் குடும்ப ஒற்றுமை அதிகரித்து எல்லா விஷயங்களிலும் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

மேலும் உங்கள் மீன் தொட்டிகளில் குறைந்த அளவு 9 மீன்கள் ஆவது இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் அது வாஸ்துவுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

இந்த ஒன்பது மீன்களில் எட்டு மீன்கள் சிவப்பு நிறத்திலோ,ஆரஞ்சு நிறத்திலோ, கோல்டன் நிறத்திலோ இருக்கலாம். ஒரு மீன் மட்டும் கண்டிப்பாக கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்படி ஒரு மீன் கருப்பு நிறத்தில் இருந்தால் மட்டும்தான் வீட்டுக்குள் நுழையும் யாராக இருந்தாலும் அவர்கள் எண்ண கூடிய எதிர்மறை ஆற்றல்களை அது உறிஞ்சி விடுமாம் இதனால் தீய பலன்கள் நமக்கு ஏற்படாது.

நீங்கள் வீட்டுக்குள் நுழையும்போது மீன் தொட்டி உங்களது இடப்பக்கத்தில் இருப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version