என் இனிய தமிழ் மக்களே! என தமிழ் மக்களிடம் வார்த்தையால் பேசும் பாரதிராஜாவுக்கா? இந்த நிலைமை!

இயக்குனர் பாரதிராஜா என்றாலே கிராமத்தை அப்படியே நம்  கண்முன்னே  கொண்டு வந்து படம் பிடித்து காட்டுவது மிகவும் கெட்டிக்காரர். தமிழில் பல படங்களை இயக்கியுள்ள பாரதிராஜா தமிழ் மக்களின் மனதையும், மண்ணின் மணத்தையும் அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையான  வழக்குத் தமிழில் தருவதில் வல்லவர்.

 பல படங்களை இயக்கியுள்ள பாரதிராஜா தற்போது படங்களிலும் நடிக்கத் துவங்கியுள்ளார். இவரின் நடிப்பை நீங்கள் திருச்சிற்றம்பலம் படத்தில் பார்த்தால் புரியும்.

 திரையுலகில் பல்வேறு நடிகர்கள் மட்டும் அல்ல நடிகைகளை அறிமுகம் செய்து வைத்தவர். இவரின்  படத்துக்கு நடிகர்களின் படத்திற்கு இருக்கும் ரசிகர்களைப் போலவே இயக்குனர் என்றாலும் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.

தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாரதிராஜா சென்னையில் இருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

 இந்நிலையில் இவர் தனது ரசிகர்கள் மற்றும் மற்றவர்களை மருத்துவமனைக்கு வந்து சந்திக்க வேண்டாம் எனவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் யாரும் தன்னைப் பார்க்க முடியாது உடல்நலம் சீரான பின் சந்திப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மருத்துவ செலவை இவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மேலும் இவரின் உறவினர்கள் யாரும் சிகிச்சைக்காக பணம் தரவும் முன் வரவில்லை. இந்த நிலையில் இவரின் சிகிச்சையின் முழு பணத்தையும் நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தான்  ஏற்றுக்கொண்டுள்ள என்ற செய்தி தற்போது பரவி வருகிறது.

 திரையுலகின் இயக்குனர்களில் மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்த பாரதிராஜாவின் இந்த நிலையை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. பணம் இருந்தால் மட்டும் தான் உறவுகள் உடன் இருக்கும் என்பது இதன் மூலம் ஊர்ஜிதம் ஆக்கப்பட்டுள்ளது.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதோடு மட்டும் போதாது போதுமான பணத்தை நமது எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். எவ்வளவு தான் புகழ் இருந்தாலும் காசு, பணம்,மணி, துட்டு மிக அவசியம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …