உருவாகிறது வேள்பாரி.. யார் ஹீரோ.. இயக்குனர் ஷங்கர் என்ன சொல்லியிருக்காரு பாருங்க..!

தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட் திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர். எப்படி தெலுங்கில் ஒரு ராஜமௌலி இருக்கிறாரோ கன்னடத்தில் ஒரு இயக்குனர் பிரசாந்த் நீல் இருக்கிறாரோ அதேபோலதான் தமிழில் இயக்குனர் ஷங்கரும் இருந்து வருகிறார்.

தற்சமயம் இயக்குனர் ஷங்கர் இந்தியன் படத்தின் இரண்டு பாகங்களை இயக்குவதில் பிஸியாக இருந்து வந்தார். அந்த இரண்டு படங்களின் வேலைகளும் முடிந்துவிட்டன. அதனை தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் உருவாகி வந்த கேம் சேஞ்சர் திரைப்படமும் முடிவைக் கண்டிருக்கின்றது.

ஷங்கரின் கனவு படம்:

வரிசையாக இந்த படங்கள் எல்லாம் வெளியாக வேண்டியது மட்டும் தான் பாக்கி. இந்த நிலையில் அடுத்து இயக்குனர் ஷங்கர் எந்த திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்து வந்தது. எப்படி மணிரத்தினத்திற்கு பொன்னியின் செல்வன் ஒரு கனவு படமாக இருந்ததோ அதேபோல இயக்குனர் ஷங்கருக்கு வெகு நாளாகவே வேள்பாரி நாவலை படமாக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வருகிறது.

உருவாகிறது வேள்பாரி.. யார் ஹீரோ.. இயக்குனர் ஷங்கர் என்ன சொல்லியிருக்காரு பாருங்க..!

மேலும் கமலும் இது குறித்து இந்தியன் 2 பிரமோஷனில் பேசியிருக்கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வந்த கதைதான் வேள்பாரி. அதற்குப் பிறகு அது தனி புத்தகமாக வெளியானது பொன்னியின் செல்வன் நாவல் போலவே வேள்பாரிக்கும் அதிகமான வரவேற்புகள் இருந்து வருகிறது.

ஏனெனில் பறம்பு மலையை சேர்ந்த குறுநில மன்னனான வேள்பாரி எப்படி மூவேந்தர்களும் சேர்ந்து சென்று போரிட்டு தோற்கடிக்கும் அளவிற்கு பெரும் வீரனாக இருந்தார் என்பது வரலாற்றில் படிப்பவர்களுக்கே ஆச்சரியத்தை தரும் விஷயமாக இருக்கிறது.

ஷங்கரின் திட்டம்:

அதை நாவலாக்கும் பொழுது இன்னும் சிறப்பாக ஆக்கியிருந்தார் சு.வெங்கடேசன். இந்த நிலையில் இதை படமாக்க வேண்டும் என்பது ஷங்கரின் ஆசையாக இருந்து வருகிறது. ஒரு பேட்டியில் இந்த நாவல் குறித்து கேட்ட பொழுது அதற்கு பதில் அளித்த ஷங்கர் வேள்பாரி நாவலை படிக்கும்படி என்னிடம் நிறைய பேர் கூறினார்கள்.

உருவாகிறது வேள்பாரி.. யார் ஹீரோ.. இயக்குனர் ஷங்கர் என்ன சொல்லியிருக்காரு பாருங்க..!

ஆனால் நேரம் இல்லாததால் அந்த நாவலை படிக்காமல் இருந்தேன். ஆனால் நாவலை படிக்க துவங்கிய பிறகு நாவலின் காட்சிகள் அனைத்தும் தன் கண்ணுக்குள் விரிந்ததாக கூறியிருக்கிறார் ஷங்கர்.

உடனடியாக இதை படமாக்கும் விருப்பத்தில் அதன் ஆசிரியர் சு வெங்கடேசிடம் பேசி அந்த கதையின் உரிமத்தையும் வாங்கி விட்டேன் என்று கூறுகிறார் ஷங்கர். இந்த கதையை அடுத்தடுத்து மூன்று பாகங்களாக திட்டமிட்டு அதற்காக திரைக்கதை வேலைகளையும் முடித்து விட்டதாக ஷங்கர் கூறியிருக்கிறார்.

ஆனால் பாடத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் குறித்து இன்னும் எதுவும் திட்டமிடவில்லை என்று கூறியிருக்கிறார் ஷங்கர். பொதுவாகவே ஷங்கர் என்றாலே பிரமாண்டம்தான் வேள்பாரி நாவலை பொறுத்தவரை சங்கரை தாண்டிய பிரமாண்டமாக அந்த நாவல் இருக்கும் என்பதால் கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட் எப்படியும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

---- Advertisement ----

Currently trending: